பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

"விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிற்கு, மகளிர் அணி தலைவர் பதவி வழங்க வேண்டும்' என, அக்கட்சி நிர்வாகிகளிடை‌யே புதிய கோஷம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு இணையாக, அவரது மனைவி பிரேமலதா, அரசியல் பிரசாரங்கள் செய்வது மட்டுமின்றி, கட்சி விழாக்களிலும், கட்சி நிர்வாகிகள் குடும்ப விழாக்களிலும் பங்கேற்று வருகிறார்.அவரது பேச்சு பலரையும் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பேசிய பிரேமலதா, "விஜயகாந்தை பிடிக்கலாம் என நினைத்து, சிலர் வலை வீசுகின்றனர். அவர், அயிரை மீன், வஞ்சிரம் மீன் என, நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், அவர் சுறா மீன். வலைவீசி பிடிக்க நினைத்தால், அவர் வலையை அறுத்துக்கொண்டு வெளியேறி விடுவார்' என்றார்.


விஜயகாந்த் மீது தொடர்ச்சியாக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடுக்கப்படும் நிலையில், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பேசும் பிரேமலதாவின் பேச்சை கேட்பதற்கென்றே, அக்கட்சியில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால், கட்சியில் பிரேமலதாவிற்கு இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே மைத்துனர் சுதீஷ் மாநில இளைஞர் அணி செயலராக உள்ள நிலையில், பிரேமலதாவிற்கு பதவி வழங்குவதை விஜயகாந்த் தவிர்த்து வருகிறார்.


குடும்ப அரசியல் ?


தே.மு.தி.க.,வில் குடும்ப அரசியல் நடக்கிறது என்று யாரும் கூறாமல் இருப்பதற்காக, நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று தெரிந்தும், கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், இவர்கள் இருவருக்கும் விஜயகாந்த் போட்டியிட சீட் வழங்கவில்லை.இந்நிலையில், இம்மாதம், 25ம் தேதி, சென்னை வானகரத்தில் தே.மு.தி.க.,வின் எட்டாவது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தின்போது, பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவியை வழங்கி கவுரவிக்க வேண்டும் என்ற கோஷம் தற்போது கட்சியில் ஒலிக்க துவங்கியுள்ளது.


இதை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம், பிரேமலதாவின் ஆதரவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். இதோடு காலியாகவுள்ள, பொதுச்செயலர் மற்றும் தொழிற்சங்க தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், விஜயகாந்த் தரப்பில், இதற்கு எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. - நமது நிருபர்


Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (29)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
20-ஜன-201311:03:18 IST Report Abuse
JALRA JAYRAMAN கணக்கு வழக்கு எல்லாம் வெளி ஆள் கையில் விட முடியுமா?
Rate this:
Share this comment
Cancel
thirumalai chari - chennai,இந்தியா
20-ஜன-201310:59:42 IST Report Abuse
thirumalai chari அட விஜயகாந்துக்கே தலைவராக இருந்தாரே... நல்ல பதவி ஆயிடிச்சே அது..... அந்த பதவி போயிடிச்சா??? என்னமோ போடா....
Rate this:
Share this comment
Cancel
panneerselvam - thajore,இந்தியா
20-ஜன-201310:29:39 IST Report Abuse
panneerselvam மற்றொரு FAMILY BUSINESS கட்சி...ஆம் ஆத்மி கட்சி தான் நல்ல கட்சி..
Rate this:
Share this comment
Cancel
SK2011 - Sharjah ,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜன-201309:34:07 IST Report Abuse
SK2011 சாமீ சின்னத்தம்பி, விஜயகாந்த் இப்பொழுது மிகவும் ரொம்ப ஸ்டெடியா இருக்கணும் முடிவு எடுப்பதில். வரும் காலத்தில் தி மு க ஆட்சிக்கு வருவதை விட டி எம் டி கே ஆட்சிக்கு வருவதை தான் மக்கள் விரும்புகிறார்கள். என்னெனில் தி மு க வின் அரசியல் சரித்திரம் முடிந்துவிட்டது. அவர்கள் தானாகவே தங்களை அழிதுகொண்டுள்ளர். ஜெயலலிதா அம்மையார் தான் காரணம் விஜயகாந்த் அவர்கள் வளர்வடர்க்கு. அண்மையில் ஜெயா அவர்கள் தீய சக்தியை அழிப்பதற்கு தயாராக இருங்கள் என்று சொன்னது கருணாநிதி குடும்பத்தை தான். இதை விஜயகாந்த் நன்கு புரிந்து கொண்டு தான் உயர்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். விஜயகாந்த் ஒரு நல்ல தலைவராக ஆவதை தான் ஜெயா விரும்புகிறார். அப்பொழுது தான் தி மு க வை துரத்த முடியும்.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
20-ஜன-201309:14:38 IST Report Abuse
NavaMayam மாம்பழத்தை , பலா பலத்தை விக்கவே கூவி கூவி நாக்கு தள்ளுது ... இதுல அத்தி பழத்தை விக்க அண்ணி பாடு திண்டாட்டம் தான்....
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
20-ஜன-201309:14:18 IST Report Abuse
sundaram இந்த செய்தியின் கடைசியில் "இதை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம், பிரேமலதாவின் ஆதரவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தியுள்ளனர்" என்பதை படித்தால், இந்த கட்சி கருணா குடும்ப கட்சியுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டதைபோலவே தோன்றுகிறது. கட்சி நாலு பேரால் பேசப்படும் நிலை எய்தியவுடனேயே "பிரேமலதாவின் ஆதரவு மாநில, மாவட்ட நிர்வாகிகள்" என்று உட்கட்சி தோன்ற ஆரம்பித்துவிட்டதே. அடுத்து சதீஷ் ஆதரவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் விரைவில் எதிர்பார்க்கலாம். அதேபோல வெகுவிரைவில் விஜயகாந்த்தின் மகன் ஆதரவு மாநில, மாவட்ட நிர்வாகிகள் தோன்றுவார்கள். எப்படியோ கட்சி களை கட்டிவிட்டது. ம்,ம் நடக்கட்டும்,நடக்கட்டும் எப்படியாவது நாலுபக்கமும் யாவாரம் நல்லா நடந்தா சரி. கடைசியில ஒவ்வொருத்தரோட ஆதரவு மாநில, மாவட்ட நிர்வாகிகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் வேட்டியை மடிச்சுகட்டிக்கிட்டு ஒருத்தரைப் பார்த்து ஒருத்தர் ஒரு விரலை நீட்டி நாக்கை மடக்கி ........ சூப்பரான விஸ்வரூபம் இருக்குன்னு சொல்லுங்க.
Rate this:
Share this comment
குடியானவன்-Ryot - தண்ணீர் இல்லா தேசம் ,இந்தியா
20-ஜன-201311:11:00 IST Report Abuse
குடியானவன்-Ryotதிரு. விஜயகாந்த் அவர்கள் உண்மையிலே தமிழக மக்களுக்கும் தன் கட்சி தொண்டர்களுக்கும் நன்மை செய்யவெண்டும் என்றால் அவர் செய்யவேண்டியது ஒன்று தான், திரு. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா அவர்களுடன் இனி கூட்டனி சேராமல் இருப்பது தான்......
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
20-ஜன-201308:15:09 IST Report Abuse
Krish அரசியலில் பல சமயங்களில் பல நல்ல தலைவர்களுக்கு அவர்களது குடும்பமே ஒரு பெரிய சுமையாகிவிடுகிறது... பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை முழு மூச்சாய் எதிர்த்த லாலு,முலாயம் போன்றவர்களின் மனைவி,மகன்,மருமகள் இவர்கள்தான் பதவியில் இருந்தவர்கள் இன்னும் இருப்பவர்கள்.வாரிசு அரசியலை இந்திய மக்கள் அடியோடு புறம் தள்ளி ,வல்லவர்களை,நல்லவர்களை,ஆதரிக்க முன் வர வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Krish - delhi,இந்தியா
20-ஜன-201308:10:46 IST Report Abuse
Krish இது கோஷம் அல்ல.... மக்களிடம் புதிதாக காட்டுவதற்கான ஒரு வேஷம் ....
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
20-ஜன-201307:24:44 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் மற்றுமொரு ஜனநாயக கட்சி...........முடியலடா சாமி............
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
20-ஜன-201306:47:55 IST Report Abuse
NavaMayam எனகென்னமோ அவர் மனைவி பிரெமலாதா வை கருப்பு ஜெயலலிதா ன்னு அறிவிச்சு அவரிடமே கட்சியை ஒப்படைக்கலாம் ... எம்ஜிஆர் காலம் முடிஞ்சி இப்போ ஜெ காலம் தானே ஓடுது... காலத்துக்கேற்ற மாற்றம் வேண்டும்....
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
20-ஜன-201310:41:38 IST Report Abuse
சு கனகராஜ் சோனியா ராகுல் கருணா ஸ்டாலின் முலயாம் அகிலேஷ் வரிசையில் விஜயகாந்த் பிரேமலதா காற்றுள்ள போதே தூற்றுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்