Advertisement
ஐந்து லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தை உண்டியலில் போட்ட போலீஸ்காரர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013,00:49 IST

பெங்களூரு:தற்கொலை வழக்கில் இருந்து விடுவிக்க, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற போலீஸ்காரர், அதை திருப்பதி கோவில் உண்டியலில் போட்டார்.கர்நாடக மாநிலம், பெங்களூரு கோதனூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன்; போலீஸ்காரர் மஞ்சுநாத். கடந்தாண்டு ஆகஸ்ட்டில், தற்கொலை வழக்கில் கைதான, ஒருவரை விடுவிக்க, அவரது குடும்பத்தினரிடம், 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார் புருஷோத்தமன். அதற்கு மஞ்சுநாத்தும் உடந்தையாக இருந்தார்.
ஆனால், கைதானவரின் குடும்பத்தினரோ, லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. அதனால், கர்நாடக லோக் ஆயுக்தா அமைப்பிடம் புகார் செய்தனர். இதையடுத்து, ரசாயன கலவை தடவிய ரூபாய் நோட்டுக்களை, கைதானவரின் குடும்பத்தினரிடம் கொடுத்து, அதை லஞ்சம் கேட்ட போலீஸ்காரர்களிடம் கொடுக்கும்படி, லோக்ஆயுக்தா அமைப்பினர் தெரிவித்தனர்.லஞ்சம் வாங்கும் போது, இன்ஸ்பெக்டரையும், போலீஸ்காரரையும் கையுள் களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக, இப்படி திட்டம் தீட்டப்பட்டது.ஆனால், நடந்ததோ வேறு. குறிப்பிட்ட இடத்தில் கைதானவரின் குடும்பத்தினர், லஞ்சப் பணத்துடன் காத்திருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த, போலீஸ்காரர் மஞ்சுநாத், அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். இதனால், லோக்ஆயுக்தா போலீசாரால் அவரை கைது செய்ய முடியவில்லை.அத்துடன், பணத்தை பறித்துச் சென்ற மஞ்சுநாத் சில நாட்கள் தலைமறைவாகி விட்டார். ஓரிரு நாட்களுக்கு முன், கோர்ட்டில் சரண் அடைந்தார்.
லோக்ஆயுக்தா போலீசார், அவரை காவலில் எடுத்து விசாரித்த போது, "பறித்துச் சென்ற பணத்தில் குறிப்பிட்ட பகுதியை செலவிட்டு விட்டு, மீதிப் பணத்தை திருப்பதி உண்டியலில் போட்டு விட்டேன்' என, தெரிவித்தார். மஞ்சுநாத்தின் வாக்கு மூலம், அவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.இருப்பினும், சந்தர்ப்ப, சாட்சியங்களை வைத்து, இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீஸ்காரர் மஞ்சுநாத்திற்கு தண்டனை வாங்கித் தர போலீசார் முற்பட்டுள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Skv - Bangalore,இந்தியா
20-ஜன-201317:44:43 IST Report Abuse
Skv அட பரதேசி நீ செய்ற பாவத்துலே பாலாஜிக்கும் ஷேரா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nethaji - Muthuvai, Mukavai Dist.,இந்தியா
20-ஜன-201310:07:23 IST Report Abuse
Nethaji லஞ்சத்திற்கு தூக்கு தண்டனை இல்லையா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.