புதுடில்லி:எல்லையில், பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி அழைப்பு விடுத்துள்ளார்.காஷ்மீர், பூஞ்ச் பகுதியில், அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய ராணுவத்தினர் இருவரின் தலைகளை கொடூரமான முறையில் துண்டித்தனர்; மேலும், ஒரு வீரரின் தலையை தங்களுடன் கொண்டு சென்று விட்டனர். கடந்த வாரம் நடந்த இந்த கொடுஞ்செயலுக்கு, நாடு முழுவதிலுமிருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால், இந்தியா - பாக்., எல்லையில், வீரர்கள் குவிக்கப்பட்டனர். போர் மூளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.இந்த சூழலில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி, பேச்சு வார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அத்துடன், தங்களது ராணுவத்தினரிடம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.