Advertisement
கடற்கரையில் மனைவியை தாக்கிய "குடிமகன்':தடுத்த போலீசாருடன் கட்டிப் புரண்டு "டிஷ்யூம்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013,00:59 IST

புதுச்சேரி:கடற்கரையில் மனைவியை அடித்து உதைத்த போதை வாலிபர், போலீசாருடனும் கட்டிப் புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி கடற்கரைச் சாலைக்கு நேற்று மதியம் 35 வயதுள்ள வாலிபர் தனது மனைவியுடன் வந்தார். போதையில் இருந்த வாலிபருக்கும், அவரது மனைவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த வாலிபர், தாலிக்கயிற்றையும், அணிந்துள்ள நகைகளையும் கழற்றித் தரக் கேட்டு மனைவியை தாக்கினார்.
வலி தாங்காத பெண், தப்பியோட முயன்றும் விடாமல் தாக்கினார். இதனால் பயந்த பெண் தாலிக் கயிறு, நகைகளை கணவரிடம் கழற்றிக் கொடுத்தார். மனைவியை தாக்கி ரகளையில் ஈடுபட்ட வாலிபரை, பொது மக்கள் தட்டிக் கேட்டனர். அவர்களையும் அவர் தாக்க முயன்றார். அப்போது, அவ்வழியே வந்த கான்ஸ்டபிள்கள் இருவர், வாலிபரை தட்டிக் @கட்டனர். அவர்களையும் "குடிமகன்' தரக்குறைவாக பேசியதால் அங்கிருந்து சென்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்த பெண் அவதியுறுவதைக் கண்ட பொதுமக்கள், பெரியக்கடை போலீசுக்கு தெரிவித்தனர்.
கான்ஸ்டபிள்கள் அன்பழகன், கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று, மனைவியை தாக்கிய "குடிமகனை' ஸ்டேஷனுக்கு அழைத்தனர். அவர், போலீஸ்காரர்களையும் தரக்குறைவாக பேசி தாக்க முயன்றார். இதில் போலீசாருக்கும்- வாலிபருக்கும் இடையே கட்டிப்புரண்டு சண்டை நடந்தது. 15 நிமிட போராட்டத்திற்குப் பின், ரகளை செய்த வாலிபரை, "இது தாண்டா போலீஸ்' பாணியில் கவனித்த போலீசார், ஆட்டோவில் ஏற்றி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், வாலிபர், முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த ஆதவன்,35; கண்ணாடி பிரேம் கடையில் பணிபுரிகிறார். கடற்கரையில் இரண்டாவது மனைவியிடம் தகராறு செய்து, தாலிக் கயிறு மற்றும் நகைகளை பறித்தது தெரிந்தது. வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Tamilarasu Rajakkili - jeddah,சவுதி அரேபியா
20-ஜன-201318:05:16 IST Report Abuse
Tamilarasu Rajakkili இதுதான் மதுவாட்சியின் குறிக்கோள்.... நாடு நாசமாக மது ஒன்றே போதுமானது... இது அவரரவருக்கு வரும்போதுதான் தெரியும்... இதையெல்லாம் தடுக்க முடியாது.... மதுவை தடுத்தால் ஒழிய... ஆட்சியாளருக்கு வேண்டும் அறிவு.... அதைத்தான் அவர்கள் கேட்கிறார்கள் எங்கு விற்கிறது என்று... காரணம் மதுவே...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.