The events of the past week | கடந்த வார மாநில நிகழ்வுகள்| Dinamalar

கடந்த வார மாநில நிகழ்வுகள்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஜன. 11: மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக, தயாநிதி பதவி வகித்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன் சகோதரருக்கு சொந்தமான, "டிவி' நிறுவனத்துக்கு 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
ஜன. 12: "கர்நாடக அணைகளில் இருக்கும், 16 டி.எம்.சி., தண்ணீர், அம்மாநிலத்தின் குடிநீருக்காக தேவைப்படுகிறது. அதனால், தமிழகத்தின் சம்பா பயிரை காப்பாற்ற, ஜனவரி மாதத்தில் தண்ணீர் திறந்து விட வாய்ப்பில்லை என, காவிரி கண்காணிப்புக் குழு எடுத்த முடிவு, ஒருதலைப்பட்சமானது' என்று, டில்லியில் உள்ள, தமிழக சட்டநிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஜன. 13: டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவம், அனைத்து தரப்பினரிடமும், ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக, பொதுமக்கள் நடத்திய போராட்டம், போலீஸ், அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோருக்கு, ஒரு எச்சரிக்கையாக அமைந்தது' என, டில்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் கூறினார்.
ஜன. 15: "இந்திய ராணுவ வீரர்கள் இருவரை, கொடூரமாக கொலை செய்தபின், பாகிஸ்தானுடன் இயல்பான உறவு வைத்துக் கொள்வதற்கு, இனி என்ன வேலை இருக்கிறது. பாக்., ராணுவத்தின் நடவடிக்கை, காட்டுமிராண்டித்தனமானது' என, மிகவும் தாமதமாக பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்தார்.
ஜன. 16: ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில், அரியானா முன்னாள் முதல்வர், ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதாலா உள்ளிட்ட 55 பேர் குற்றவாளிகள் என, அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து, குற்றவாளிகள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜன. 17: "உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நாட்டு மக்களில், 67 சதவீதம் பேருக்கு, நபர் ஒன்றுக்கு, மாதம் தோறும், 5 கிலோ உணவு தானியத்தை மிக குறைவான விலையில் வழங்க வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரை செய்தது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.