ஜம்மு - காஷ்மீர்
ஜன. 11: எல்லை பகுதியில், ராணுவத்தை குவித்து வரும் பாகிஸ்தான், தங்கள் வீரர்களின் விடுமுறையையும் ரத்து செய்தது. இந்திய ராணுவமும், எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
கர்நாடகாஜன. 12: "தற்போதைய சூழலுக்கு, காந்திய கொள்கைகள் பொருந்தாது என, பெரும்பாலான அரசியல்வாதிகள் கருதுகின்றனர். இது, தவறான கருத்து' என, பெங்களூருவில், மகாத்மா காந்தியின் பேத்தி, சுமித்ரா காந்தி குல்கர்னி கூறினார்.
திரிபுராஜன. 13: திரிபுரா மாநிலத்தில் அடுத்த மாதம் 14ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தில்லுமுல்லு செய்து, ஏராளமான வாக்காளர்களை மோசடியாக சேர்த்துள்ளது என, காங்., புகார் செய்தது. மத்திய தேர்தல் பார்வையாளர்கள், வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து, மாநிலத்தில் மொத்தம், 46 ஆயிரம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டு, அந்த பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
உத்தர பிரதேசம்ஜன. 15: "குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பாராட்டி பேசுவது, காந்தியடிகள் மேடையில், அவரைக் கொன்ற கோட்சேவை பாராட்டுவது போன்றது' என, லக்னோவில் நடந்த காங்கிரஸ் கருத்தரங்கில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய நிலக்கரி துறை அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.
மேற்கு வங்கம்ஜன. 16: "டில்லியில் நடந்தது போன்ற கொடுமையான சம்பவங்கள் திடீரென நடந்து விடுவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்ட கலாசார மாற்றமும், பண்பாட்டு சீரழிவும், நாம் பின்பற்றி வரும் மேற்கத்திய கலாசாரமும் தான், இத்தகைய பாலியல் பலாத்கார வன்முறை சம்பவங்களுக்கு முக்கிய காரணம்' என, புரி சங்கராச்சாரியார், சுவாமி நிஸ்சலானந்தா தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.