Advertisement
மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு:இத்தாலி பாதுகாவலர்கள் டில்லிக்கு மாற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013,01:16 IST

கொச்சி:'தமிழக மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற, இத்தாலிய கப்பலின் பாதுகாவலர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க, மத்திய அரசு, சிறப்பு கோர்ட் அமைக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து, இத்தாலிய கப்பல் பாதுகாவலர்கள் இருவரும், டில்லி சென்றனர்.
கடந்தாண்டு, பிப்., 15ம் தேதி, கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, தமிழக மீனவர்களை, கடற்கொள்ளையர்கள் என நினைத்து சுட்டுக் கொன்ற, இத்தாலி கப்பலான, "என்ரிகா லக்ஷி'யின் பாதுகாவலர்களான, மாசிமிலியானோ லத்தோர் மற்றும் சால்வத்தோர் ஜிரோண் ஆகிய இருவருக்கும், கொல்லம் கோர்ட் அளித்த ஜாமின் உத்தரவுப்படி, கொச்சியில் தங்கியிருந்தனர்.சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை அடுத்து, இருவரும், நேற்று முன் தினம் இரவு, 8:00 மணிக்கு, விமானம் மூலம் டில்லி சென்றனர். அவர்களுடன், இந்தியாவுக்கான, இத்தாலி தூதரும், இத்தாலி நாட்டு பிரதிநிதிகளும் சென்றனர்.டில்லி சென்ற இருவரும், நேற்று காலை, டில்லி, சாணக்கியபுரி காவல் நிலையத்தில் ஆஜராகி, கையெழுத்திட்டனர். சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டு, விசாரணை துவங்கும் வரை, இருவரும் டில்லியில் இருப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
senthil - chennai,இந்தியா
21-ஜன-201311:13:05 IST Report Abuse
senthil எந்த ஸ்டார் ஓட்டல்ல ?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.