சபரிமலை:மகரஜோதி உற்சவம் நிறைவு பெற்றுள்ளதால், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, இன்று அடைக்கப்படுகிறது.சபரிமலை அய்யப்பன் கோவிலில், மகரஜோதி உற்சவத்திற்காக, கடந்த டிச., 30ம்தேதி நடைதிறக்கப்பட்டது. இம்மாதம், 14ம் தேதி மாலை, பொன்னம்பலமேட்டில், மகரஜோதி ஏற்றப்பட்டது. இதன் பின், நான்கு நாட்களாக, படி பூஜை நடைபெற்றது.மூலவருக்கு நேற்று முன்தினம் நடந்த, சந்தன அபிஷேகத்தை காண, மலையில் பக்தர்கள் பெருமளவு குவிந்திருந்தனர். நேற்றிரவு நடந்த, ராக்கால பூஜையுடன், சுவாமியை பக்தர்கள் தரிசிப்பது நிறுத்தப்பட்டது. இன்று, பந்தள ராஜ குடும்பத்து பிரதிநிதி அசோக வர்மா மட்டும், மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்.
அவரது தரிசனம் முடிந்ததும், நடை அடைக்கப்படும். பிப்., 12ம் தேதி மாசி மாத பூஜைகளுக்காக, நடை திறக்கப்படும். மண்டல, மகரஜோதி உற்சவங்களின் போது, சாமி தரிசனத்திற்காக, "ஆன்-லைனில்', 15.50 லட்சம் பேர், முன்பதிவு செய்திருந்தனர். அவர்களில், 12. 69 லட்சம் பேர், நேற்று முன்தினம் வரை, தரிசனம் செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.