ரெய்சன்:மத்திய பிரதேச மாநிலத்தில், ஒரு பெண்ணை தன் மனைவி என, இரு ஆண்கள் சொந்தம் கொண்டாடினர். இறுதியில் திருமண ஆவணங்களை காட்டிய ஒருவருடன், அந்தப் பெண் செல்ல வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டது.மத்திய பிரதேச மாநிலம், ரெய்சன் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும், பால்யாலால் என்பவருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கொஞ்ச நாட்கள், பால்யாலாலுடன் வாழ்ந்த அந்தப் பெண்ணை, மகேஷ் மீனா என்பவர், கூட்டிச் சென்று விட்டார். மற்றொரு பகுதியில், இருவரும் சில காலம் ஒன்றாக வாழ்ந்தனர்.
இந்நிலையில், ஒரு நாள் தன் பெற்றோர் வீட்டிற்கு சென்ற அந்தப் பெண்ணை, பால்யாலால் தன்னுடன் அழைத்து சென்று விட்டார். இதையறிந்த, மகேஷ் மீனா போலீசாரை அணுகினார். "தன் மனைவியை மீட்டுத் தர வேண்டும்' என, புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்திய போது, "அந்தப் பெண் தன் மனைவி' என, பாய்லாலால் கூறினார்.இதனால், இந்த விவகாரம் கோர்ட்டிற்கு சென்றது.
நேற்று முன்தினம் ரெய்சன் நகரில் உள்ள, சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, பால்யாலாலும், மகேஷ் மீனாவும், தன் மனைவி என, சொந்தம் கொண்டாடிய அந்தப் பெண்ணை, போலீசார் ஆஜர்ப்படுத்தினர். அப்போது, அப்பெண்ணை திருமணம் செய்ததற்கான ஆதாரங்களை காட்டினார் பால்யாலால். மற்றொருவரான மகேஷால், எந்த ஆதாரங்களையும் தர முடியவில்லை. அதனால், பால்யாலால் பாதுகாப்பில், அப்பெண்ணை ஒப்படைக்க வேண்டும் என, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அந்தப் பெண்ணும் அவருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார்.இதனால், ஆசையாய் அழைத்து வந்த பெண், பாதியில் போய் விட்டாரே என்ற வருத்தத்துடன் சொந்த ஊர் திரும்பினார் மகேஷ் மீனா.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.