மணப்பாறை:
மணப்பாறை திருக்குறள் பயிற்றகத்தின் சார்பில், 35ம் ஆண்டு திருவள்ளுவர்
திருவிழா, நகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.சடையார் கோவில் நாராயணசாமி
குழுவினரின் திருக்குறள் கோலாட்டம், மங்கள இசையுடன் பெரியார் சிலையில்
இருந்து, திருவள்ளுவர் பட ஊர்வலம் பிச்சை இரும்பொறை தலைமையில் நடந்தது.
நீதிபதி செல்லபாண்டியன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். வக்கீல் தமிழ்மணி
பேசினார். நகர வீதிகள் வழியாக வந்த ஊர்வலத்தின் இடையே, திருக்குறள்
விளக்கம் தரப்பட்டது. சென்னிமலை சுப்பிரமணியத்தின் இன்னிசை நடனம்
நடந்தது.
நகராட்சி பள்ளியில் நடந்த விழாவில், நகராட்சி சேர்மன் சாந்தா தலைமை
வகித்தார். இன்ஜினியர் சிவதமிழ்க்கதிரவன் வரவேற்றார். நகர காங்கிரஸ்
தலைவர் பிச்சை, நகராட்சி கவுன்சிலர் ராமமூர்த்தி, ஆசிரியர் பிச்சை,
பெரம்பலூர் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புலவர் சுடரொளியன்,
அரங்கநாதன், வயோலா, துரைராஜ மாணிக்கம் ஆகியோர் தமிழின் மேன்மை குறித்து
பேசினர்.சிந்தனை கருத்தரங்கில் முனைவர் கருராஜகோபாலன், பாவலர் மணவை
தமிழ்மாணிக்கம் ஆகியோர் பேசினர்.திருக்குறள் பயிற்றக நிறுவனர் புலவர் நாவை
சிவம் தலைமையில், திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
டாக்டர் கலையரசன், ஜீவன் கல்வி நிறுவன நிர்வாகி வினோஜ் பரிசு
வழங்கினார்.விழாவில், திருச்சி டாக்டர் மதன கோபால், புலவர் அரங்கநாடன்,
தாமரைச்செல்வி, துரையரசன் ஆகியோருக்கு பாராட்டு பட்டங்கள்
வழங்கப்பட்டன.சிவதளபதி தமிழழகன் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.