புதுடில்லி:"டில்லியில், 2012ம் ஆண்டில், 706 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்' என, தேசிய குற்ற ஆவணங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:டில்லியில், கடந்த ஒரு ஆண்டில், பாலியல் பலாத்கார சம்பவங்கள், 23 சதவீதம் அதிகரித்துள்ளன. பெண்கள் பாலியல் பலாத்காரம் தொடர்பாக, 2011ல், 572 வழக்குகள் பதிவாகியிருந்தன. 2012ல் இந்த எண்ணிக்கை, 706 ஆக உயர்ந்துள்ளது. 2002ல் நடந்த சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், இரு மடங்கு அதிகம்.அதேபோல், பெண்கள் மானபங்கம் தொடர்பாக, 2011ல், 657 வழக்குகளும்; 2012ல், 727 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பாலியல் பலாத்கார சம்பவங்களில், குற்றம் சுமத்தப்பட்டவர்களில், 96 சதவீதம் பேர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களே. 4 சதவீதத்தினர் மட்டுமே புதியவர்கள்.இவ்வாறு, குற்ற ஆவண அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.