The petition requested the Supreme Court to the Federal Government on legal rules Add "Notice ' | சிறார் சட்ட விதிகளை திருத்த கோரிய மனுமத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் "நோட்டீஸ்'| Dinamalar

சிறார் சட்ட விதிகளை திருத்த கோரிய மனுமத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் "நோட்டீஸ்'

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி:சிறார் சட்ட விதிமுறைகளை திருத்தக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய மற்றும், டில்லி மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட், "நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.டில்லியில், சமீபத்தில், மருத்துவ கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். இந்த கொடூர குற்றத்தை செய்த, ஆறு பேரில் ஒருவர், 18 வயது நிரம்பாத மைனர். சிறார் சட்டப்படி, 18 வயது நிரம்பாதவர், எவ்வளவு பெரிய கொடூர குற்றம் புரிந்தாலும், அவர்களுக்கு குறைந்த காலமே, தண்டனை வழங்க முடியும்.எனவே, சிறார் சட்டப் பிரிவில் திருத்தம் செய்யக் கோரி, டில்லியைச் சேர்ந்த, சலீல் பாலி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனு:குறிப்பிட்ட சில வெளிநாடுகளில், சிறாருக்கென, தனி சட்டங்கள் இருந்தாலும், குற்றத்தின் தன்மை தீவிரமாக இருந்தால், அவர்களை சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்காமல், பொதுவான சட்டத்தின் கீழ்தான், விசாரிக்கின்றனர்.இதன் மூலம், கொடூரமான குற்றம் புரிந்தவர், சிறாராக இருந்தாலும், அவருக்கு கடும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. நம் நாட்டிலும், இதுபோல், வயதை கணக்கில் எடுக்காமல், குற்றத்தின் தன்மையை பொறுத்து, விசாரிக்கும் வகையில், சிறார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.நீதிபதிகள், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கும், டில்லி மாநில அரசுக்கும், நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை