மும்பை:""சிவசேனா தலைவரான மறைந்த பால்தாக்கரே, எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர்; அவர் ஒரு சர்வாதிகாரி அல்ல,'' என, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறினார்.சிவசேனா, எம்.பி., சஞ்சய் ரவுத் எழுதிய புத்தகம், மும்பையில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில், சிவசேனா செயல் தலைவர், உத்தவ் தாக்கரேயுடன் பங்கேற்ற, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி பேசியதாவது:பால்தாக்கரே ஒரு போதும், ஜாதி அடிப்படையிலான அரசியலில் ஈடுபட்டதில்லை. சிலர் அவரை, சர்வாதிகாரி போல சித்தரித்தாலும், அவர் அப்படிப்பட்டவர் அல்ல. சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலேயே அவர் முடிவெடுப்பார். எது சரியென அவருக்கு தோன்றுகிறதோ, அதையே செய்வார்.நுட்பமான பிரச்னைகளைப் பற்றி, பால் தாக்கரே அதிகம் சிந்திப்பார். எப்போதாவது ஒரு பிரச்னையுடன், நாம் அவரை அணுகினால், நாம் சொல்வதை கவனமாக கேட்பார், நாம் செய்வது சரியென தெரிந்தால், அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்.இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.