க.பரமத்தி:
"முன்னூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மோளப்பாளையம் மரகதீஸ்வரர் கோவிலுக்கு சாலை
உள்ளிட்ட அடிப்படை வசதி களை செய்து தரவேண்டும்' என, பக்தர்கள்
எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன்
முன்னூர் பஞ்சாயத்தில் மரகதீஸ்வரர் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை
வாய்ந்த கோவில், 360 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. க.பரமத்தி, முன்னூர்,
குப்பம், நெடுங்கூர் மற்றும் ஆரியூர் உள்ளிட்ட, ஐந்து பஞ்சாயத்து பகுதி
மக்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாசி மக திருவிழாவில், பால்காவடி எடுத்து
மக்கள் வணங்கி வருகின்றனர்.விழாவின் போது உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில்
இருந்தும், பக்தர்கள் விழாவுக்கு வருகின்றனர்.
ஆனால், கோவிலை சுற்றி பல
ஆண்டுகளாக முட்புதர்கள் முளைத்துள்ளது.இதனால் கோவிலை பராமரித்து சாலை வசதி,
குடிநீர் வசதி மற்றும், மூன்று காலை பூஜை நடத்தக்கோரிபொதுமக்கள் கோரிக்கை
வைத்தனர். இதையடுத்து, அப்போதைய இந்து அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி,
கலெக்டர் அண்ணாமலை ஆகியோர், கோவிலை சுற்றி தார்ச்சாலை அமைக்கவும், காவிரி
கூட்டுகுடிநீர் வசதி மற்றும் மூன்று கால பூஜைகள் நடத்தவும்
உத்தரவிட்டனர்.ஆனால், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, தற்போதைய அ.தி.மு.க., அரசு பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று,
மரகதீஸ்வரர் கோவிலுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என,
அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.