DISTRICT NEWS | மண்ணெண்ணெய் கோரிபொதுமக்கள் சாலை மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண்ணெண்ணெய் கோரிபொதுமக்கள் சாலை மறியல்

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய பகுதிகளை சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள மார்க்கெட்டிங் சொசைட்டி பங்க் மூலம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது.கடந்த முறை, 26 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு பதில், 21 ஆயிரம் லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஐநூறு ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த மாதம் மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை, என புகார் கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த மாதம் மண்ணெண்ணெய் வாங்காதவர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது.

அப்போது, இம்மாதம் மண்ணெண்ணெய் பெறுவதற்காக, 200க்கும் மேற்பட்ட பொதுமக்களும் விற்பனை நிலையத்திற்கு வந்திருந்தனர்.அங்கிருந்த விற்பனையாளர், கடந்த மாதம் வாங்காத உள்தாள் இணைத்த ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் மண்ணெண்ணெய் வழங்கப்படும், என தெரிவித்தார்.இதனால், ஆத்திரமடைந்த ஜனவரி மாத மண்ணெண்ணெய் வாங்க வந்த ரேஷன் கார்டுதாரர்கள் முறையாக மண்ணெண்ணை வழங்கக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.இத்தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இதனால், பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில், 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை