புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே, மாடு மேய்க்கச் சென்ற வயதான பெண்ணை கட்டையால் அடித்து
கொலை செய்து, அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச்சென்றவர்களை போலீஸார் தேடி
வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அடுத்த, பூவம்பட்டி
கிராமத்தைச் சேர்ந்தவர் முத்திரியம். இவரது மனைவி சந்தானமேரி, 60.
நேற்றுமுன்தினம் மாடுகளுடன் மந்தைவெளிக்கு சென்ற சந்தானமேரி மாøலாகியும்
வீடு திரும்பவில்லை. மாடுகள் மட்டும் வீடுதிரும்பியுள்ளது.
இதையடுத்து,
மனைவியை தேடிப்பார்த்தும் கிடைக்காததால், முத்திரியம் உறவினர்களிடம்
கூறியுள்ளார். நேற்று காலையில் மீண்டும் மந்தைவெளிக்கு சென்று தேடிய போது,
புதரில் ரத்த காயத்துடன் சந்தானமேரி இறந்து கிடந்தார். கட்டையால் தலையில்
அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த சந்தான மேரி அணிந்திருந்த தாலி,
தோடு, மூக்குத்தி ஆகிய, மூன்று பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச்
சென்றிருந்தனர்.தகவலறிந்து சம்பவஇடம் சென்ற அரிமளம் போலீஸார், பிணத்தை
மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீஸ் மோப்பநாய்
மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.