பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில், இளம்பிள்ளை வாத நோயை முழுமையாக ஒழிக்க, முதல்கட்டமாக ஜனவரி, 20ம் தேதி (இன்று), இரண்டாம் கட்டமாக, பிப்ரவரி, 24ம் தேதிகளில், பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம், 354 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள், சத்துணவு பணியாளர்கள் என மொத்தம், 1,416 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.எனவே, பொதுமக்கள் அனைவரும், ஐந்துக்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் முகாம்களுக்கு அழைத்து வந்து போலியோ சொட்டு மருத்து போட்டுக்கொள்ள வேண்டும்.பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் அனைத்து குழந்தைகளும் போலியோ சொட்டுமருந்து போட்டுக்கொள்ள விழிப்புணர்வு பிரசார பணியில் ஈடுபடவேண்டும், என பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.