அரியலூர்: அரியலூரில், கணித மேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா மற்றும் கல்வியியல் கல்லூரியில் கணித மன்றம் தொடக்க விழா நடந்தது.
அரியலூர்,
எஸ்.ஆர்.எம்., கல்வியியல் கல்லூரியில் நடந்த, கணித மேதை ராமானுஜம் பிறந்த
நாள் விழா மற்றும் கணித மன்றம் தொடக்க விழாவுக்கு, கல்லூரியின் சேர்மன்
சுப்ரமணியன் தலைமை வகித்தார். கல்வி நிலைய ஆலோசகர் ராணி குத்துவிளக்கு
ஏற்றினார். உதவி பேராசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். முன்னாள் நகராட்சி
துணை தலைவர் சுப்ரமணியன், கல்வி நிலைய செயலாளர் நிவாஸ் விஜய், கல்லூரி
முதல்வர் (பொறுப்பு) ராஜா முன்னிலை வகித்தனர்.கணித மேதை ராமானுஜம் படத்தை,
அரியலூர் அரசு கலைக்கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் கந்தசாமி திறந்து
வைத்து பேசினார். பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கான
பரிசுகளை, அரியலூர் அரசு கலைக்கல்லூரியின் துணை முதல்வர் பேராசிரியர்
தியாகராஜன், அரியலூர் அரசு மருத்துவமனை டாக்டர் அருண் சங்கர் உள்ளிட்டோர்
வழங்கி பேசினர். கணிதத்துறை மாணவி அபிராமி நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.