DISTRICT NEWS | கோஷ்டி மோதல்; 12 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோஷ்டி மோதல்; 12 பேர் கைது

Added : ஜன 20, 2013
Advertisement

அரியலூர்: கீழப்பழுவூர் அருகே நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக, இரண்டு தரப்பையும் சேர்ந்த, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே, கருப்பிலாக்கட்டளை கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மூப்பனார் மகன் சந்திரசேகர், 24. டாடா ஏஸ் வேன் டிரைவாக பணியாற்றும் சந்திரசேகர், அதே ஊரிலுள்ள காலனி தெருவை நீலமேகம் உள்ளிட்டோரை அழைத்து கொண்டு, பெண் அழைப்பு நிகழ்ச்சிக்காக, டாடா ஏஸ் வண்டியில் வாடகை சவாரியாக, புதுப்பாளையம் கிராமத்துக்கு சென்றார்.பெண் அழைப்பு நிகழ்ச்சி முடிந்து ஊர் திரும்பும் போது, பொய்யூர்- சுத்துக்குடி பிரிவு பாதை அருகே வந்த போது, வேன் டிரைவர் சந்திரசேகருக்கும், வேனில் வந்த நீலமேகம் மற்றும் அவரது உறவினர்களுக்கும் இடையே, வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நீலமேகம் உள்ளிட்டோர், சந்திரசேகரை திட்டி, இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்ய முயன்றனர்.கடந்த, 17ம் தேதி மாலை, 6 மணியளவில் நடந்த இச்சம்பவம் பற்றி தகவறிந்த, டிரைவர் சந்திரசேகரின் உறவினர்கள் பலரும் ஒன்று திரண்டு, கருப்பிலாகட்டளை கிராமத்துக்கு, மினி பஸ்ஸில் வந்து கொண்டிருந்த, காலனி தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் செந்தில்குமார் உள்ளிட்டோரை வழி மறித்து, சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக, கருப்பிலாக்கட்டளை காலனி தெருவை சேர்ந்த, செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில், அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம், 37, அவரது உறவினர்களான முத்தையன், 65, தேவேந்திரன், 39, நல்லேந்திரன், 31, மதியழகன், 31, விஜயகுமார், 25, பழனிசாமி, 35, ராமலிங்கம், 51, சண்முகம், 32, சேகர், 55, சந்திரசேகர், 24, முருகேசன், 52, மற்றொரு பழனிசாமி, 40, உள்பட, 13 பேர் மீது, கீழப்பழுவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.வேன் டிரைவர் சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில், கருப்பிலாக்கட்டளை காலனி தெருவை சேர்ந்த நீலமேகம், 47, செந்தில், 28, சங்கர், 25, அறிவழகன், 32, நேரு, 45, சங்கராசு, 50, கலியமூர்த்தி, 45, பரமசிவம், 61, தனராஜ், 61, உள்பட ஒன்பது பேர் மீது, ஆறு பிரிவுகளில், கீழப்பழுவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கோஷ்டி மோதலில், காயமடைந்த வேன் டிரைவர் சந்திரசேகர், காலனி தெருவை சேர்ந்த செந்தில்குமார், ஜெய்சங்கர், செந்தில் செல்வன், அன்பழகன் ஆகியோர், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கருப்பிலாகட்டளை கிராமத்தில் நடந்த கோஷ்டி மோதல் தொடர்பாக, ஆறுமுகம், தேவேந்திரன், நல்லேந்திரன், மதியழகன், ராமலிங்கம், வேன் டிரைவர் சந்திரசேகர், முருகேசன், பழனிசாமி உள்ளிட்ட எட்டு பேர், மற்றொரு தரப்பை சேர்ந்த நீலமேகம், நேரு, பரமசிவம், தனராஜ் உள்ளிட்ட நான்கு பேரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோஷ்டி மோதலை தொடர்ந்து, கருப்பிலாக்கட்டளை கிராமத்தில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை