தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வீதியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்
புதுப்பிக்கப்பட்ட கிளையை, மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம்
திறந்து வைத்தார்.முதுநிலை மண்டல மேலாளர் ரகுவத்ஸசாரி தலைமை வகித்தார்.
வடக்கு வீதி வங்கி கிளை முதுநிலை மேலாளர் நந்தகுமாரன் வரவேற்றார்.
மத்திய
நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் பேசியதாவது: தமிழகத்தில்,
கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை பல்வேறு வங்கிகள் சார்பில், 43 ஆயிரத்து,
595 பேருக்கு, 683 கோடியே, 88 லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய் கல்விக்கடனாக
வழங்கப்பட்டுள்ளது. இதில், ஐ.ஓ.பி., சார்பில், 13 ஆயிரத்து, 906 பேருக்கு,
74 கோடியே, 65 லட்சம் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டத்தில்
பல்வேறு வங்கிகள் சார்பில், 11 ஆயிரத்து, 528 பேருக்கு ரூபாய், 41 கோடியே,
25 லட்சத்து, 27 ஆயிரம் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில், ஐ.ஓ.பி.,
யின் சார்பில் மட்டும், 6,139 பேருக்கு, 27 கோடியே, 52 லட்சத்து, 28 ஆயிரம்
ரூபாய் கல்விக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.தஞ்சாவூர் வடக்கு வீதி ஐ.ஓ.பி.,
கிளையில், கடந்தாண்டு கல்விக் கடன், சிறுதொழில் கடன், வீட்டுக்கடன்,
விவசாயக்கடன், நகைக்கடன் என, 80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட வங்கி சிறப்பாக செயல்படும்.இவ்வாறு அவர் பேசினார்.துணை
மேலாளர் காமாட்சி நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.