தஞ்சாவூர்:
தஞ்சாவூர், பூம்புகார் விற்பனை நிலையத்தில் நேற்று, 19ம் தேதி முதல்
ஜனவரி, 31ம் தேதி வரை மர கலைப்பொருட்கள் கண்காட்சி நடக்கிறது.
கண்காட்சியில்,
தமிழ்நாட்டில் மர சிற்பங்களுக்கு பெயர் பெற்று விளங்கும் தமம்பட்டி
கைவினைகஞர்களால் உருவாக்கப்பட்ட மரச்சிற்பங்களில் கஜலெட்சுமி, கணபதி,
கிருஷ்ணர் மற்றும் இதர சிற்பங்களும், கள்ளக்குறிச்சியிலுள்ள பூம்புகார் மர
சிற்ப நிலையத்திலிருந்து சந்தன மர சிற்பங்கள் மற்றும் நூக்க மர
சிற்பங்களும், உத்திர பிரதேச மாநிலத்திலிருந்து வந்துள்ள ரூம் டிவைடர், நகை
பெட்டிகள், கை விரல்கள், முதுகு, பாதங்கள் மற்றும் மூட்டு வலிகளை
குணப்படுத்தக் கூடிய அக்குபிரஷர் மரப்பொருட்களும் கண்காட்சியில்
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து கலைநயமிக்க
யானை, குதிரை, ஒட்டகம், அசோக் ஸ்தூபி, பூ ஜாடிகள், குபேர பொம்மைகள் மற்றும்
எண்ணற்ற மரச் சிற்பங்களும், கர்நாடக மாநிலத்திலிருந்து நூக்க மர
உட்பதிப்பு வேலைப்பாடுகள், பூஜை மண்டபங்களும் விற்பனைக்கு
வந்துள்ளன.மரசிற்பங்கள் உருவாக்கக்கூடிய கைவினைஞர்களின் திறமைகளை
வெளிப்படுத்தவும், சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தர உதவுவதே இக்கண்காட்சியின்
நோக்கம். கண்காட்சியில் இடம்பெறும் பொருட்களுக்கு, பத்து சதவீதம் சிறப்பு
தள்ளுபடி வழங்கப்படுகிறது. மூன்று லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.