புதுக்கோட்டை:
""தமிழகத்தின் வளர்ச்சியில், தி.மு.க., தலைவர் கருணாநிதி முட்டுக்கட்டை
ஏற்படுத்தி வருகிறார்,'' என்று அமைச்சர் சுந்தர்ராஜ் குற்றஞ்சாட்டினார்.
புதுக்கோட்டையில்
மாவட்ட அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
நடந்தது. மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர்
பாஸ்கர் வரவேற்றார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
சுந்தர்ராஜ் பேசியதாவது:அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தவேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், முதல்வர் ஜெயலலிதா பல
திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தி.மு.க., ஆட்சியில்,
அரசுத்துறைகள் மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களும் செயல்பட முடியாத
அளவுக்கு முடக்கப்பட்டது. குடும்ப நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
திட்டங்கள் தீட்டிய கருணாநிதி, தமிழக மக்கள் நலனில் துளி கூட அக்கரை
செலுத்தியதில்லை. தன் செல்வாக்கை பயன்படுத்தி, தமிழகத்துக்கான மத்திய
அரசின் திட்டங்களை கருணாநிதி முடக்கி வருகிறார். இதே போல், தமிழகத்தின்
வளர்ச்சியிலும், அவர் தொடர்ந்து முட்டுக்கட்டை ஏற்படுத்தி
வருகிறார்.தி.மு.க., ஆட்சியில் நடந்த நிர்வாக சீர்கேடுகளால் கூட்டுறவு
நூற்பாலைகள் அனைத்தும் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியது.
18 நூற்பாலைகள்
முடக்கப்பட்டது. அவற்றில் வேலை பார்த்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை
இழந்தனர். முடக்கப்பட்ட நூற்பாலைகளுக்கு அ.தி.மு.க., அரசு புத்துயிர்
அளித்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி கூட்டுறவு
நூற்பாலை உட்பட, ஐந்து நூற்பாலைகள் லாபகரமாக இயங்கி வருகிறது. மற்ற
நூற்பாலைகளும் லாபகரமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு
அமைச்சர் பேசினார்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்,
எம்.எல்.ஏ., கார்த்திக் தொண்டைமான், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராமையா,
மகளிரணி செயலாளர் சுபத்ராதேவி உட்பட பலர் பேசினர்.கூட்டத்தில் தே.மு.தி.க.,
மகளிரணி செயலாளர் முத்துபீவி தலைமையில், அக்கட்சியைச் சேர்ந்த பெண்கள், 25
பேர் அமைச்சர் முன்னிலையில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.