தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலஅபகரிப்பில் ஈடுபட்ட, இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.நாமக்கல்லை சேர்ந்த நடேசன் என்பவர் கடந்த, 1985ம் ஆண்டு நவம்பர், 26ம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தென்கரைகோட்டையை சேர்ந்த ஷாஜகான் என்பவரிடம், இரண்டு ஏக்கர் நிலத்தை, 33 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினார்.நடேசனுக்கு விற்ற நிலத்தில், 50 சென்ட் நிலத்தை கடந்த, 2010ம் ஆண்டு, நவம்பர் மாதம், 23ம் தேதி ஷாஜகான் வடகரையை சேர்ந்த நீதி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த நடேசன் கடந்த சிலதினங்களுக்கு முன் தர்மபுரியில் எஸ்.பி., ஆஸ்ராகர்க்கிடம் புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவின் பேரில் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் ஷாஜகான், 63, நீதி, 57 ஆகிய, இரண்டு பேரையும் நேற்று கைது செய்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.