பாலக்கோடு:
பாலக்கோடு வேளாண் வணிக மையத்தில், தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரால்
அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பாலக்கோடு வேளாண் வணிக
மையத்துக்கு பாலக்கோடு, மாரண்டஹள்ளி, காரிமங்கலம்,
பாப்பாரப்பட்டி,பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து
விவசாயிகள் தக்காளி வியாபாரம் செய்ய வருகின்றனர்.தர்மபுரி, சேலம்,
திண்டுக்கல், திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்
இருந்தும், ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான
வியாபாரிகள் தக்காளி வாங்கி செல்ல தினம் வந்து செல்கின்றனர்.இவ்வாறு மக்கள்
நமாட்டம் மிகுந்த பாலக்கோடு வேளாண் வணிக வளாக பகுதியில் பாலக்கோடு
பகுதியில் உள்ள குடியிருப்புக்கள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து
வெளியேறும் சாக்கடை கழிவு நீர் கடந்த பல மாதங்களாக தேங்கி வருகிறது.குளம்
போல் தேங்கியுள்ள சாக்கடை கழிவு நீரால் அப்பகுதியில் துர்நாற்றம்
வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகி வருகிறது. இதனால், வேளாண்
வணிக மையத்திற்கு வரும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அப்பகுதி
பொதுமக்கள், பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பல
மாதங்களாக இப்பகுதியில் குளம் போல் தேங்கியுள்ள கழிநீரால் அப்பகுதியில்
நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி
பொதுமக்கள் பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவித்தும், தேங்கியுள்ள
சாக்கடை நீரை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.விவசாயிகள்,
வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம், உடனடியாக
வேளாண் வணிக மைய வளாக பகுதியில் தேங்கி உள்ள கழிவு நீரைஅகற்ற நடவடிக்கை
எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் மீண்டும் சாக்கடை கழிவு நீர்
தேங்காத வகையில்சாக்கடை கால்வாய் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,
என பொதுநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.