தர்மபுரி:
இந்தாண்டு தர்பூசணி சீசன் கோடைக்கு முன் துவங்கியிருப்பதால், தர்பூசணி
பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஒவ்வொரு காலநிலையிலும் மனிதனின் உடலை
பாதுகாக்க இயற்கை பலவகை காய்கறிகள் மற்றும் பழ வகைகளை நமக்கு
வழங்கியுள்ளது. அவற்றை நாம் உண்ணுவதால் அந்த கால நிலைகளில் ஏற்படும் உடல்
பாதிப்புகளை தவிர்க்க முடிகிறது.கோடைகாலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும்
பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க தர்பூசணி பெரிதும் உதவுகிறது. ஒரு
குறிப்பிட்ட சீசன்களில் மட்டும் கிடைக்கும் சுவை மற்றும் வைட்டமின்கள்
நிறைந்த தர்பூசணிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்ணுவது வழக்கம்.
பழத்தில்
உள்ள அளவு தர்பூசணி தோல் மற்றும் விதைகளில் வைட்டமின்கள் அடங்கியுள்ளதால்,
பொதுமக்கள் தோலை தயிர் பச்சடியாகவும், விதைகளை அரைத்தும் உணவு பொருளாக
பயன்படுத்தி வருகின்றனர்.ஆண்டுதோறும் தர்பூசணி வரத்து பிப்ரவரி மாத
இறுதியில் இருந்து துவங்கும். இந்தாண்டு தர்பூசணி வரத்து முன்தாகவே
துவங்கியுள்ளது. தர்பூசணி வியாபாரிகள் வாங்கி தர்மபுரி மாவட்டத்தின்
பலபகுதிகளில் சாலையோரங்கள் மற்றும் தள்ளுவண்டிகள், கடைகளில் விற்பனைக்கு
குவித்துள்ளனர். இவற்றை தர்பூசணி பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கி
செல்கின்றனர்.தமிழகத்தில் தர்பூசணி பழங்கள் திண்டிவனம், கடலூர்,
பண்ரூட்டி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிகளவில் சாகுபடி
செய்யப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியில் தர்பூசணிக்கு நல்ல வரவேற்பு
உள்ளதாலும், உரிய விலை கிடைப்பதாலும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த
விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தர்பூசணி சாகுபடியில்
ஈடுபட்டுள்ளனர்.அரூர், மொரப்பூர், பென்னாகரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான
விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு
முன்னதாகவே தர்பூசணி சீசன் துவங்கியுள்ளது.தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த
மொத்த வியாபாரிகள் தர்பூசணி பழங்களை வாங்கி வந்து சில்லரை வியாபாரிகளுக்கு
கிலோ, எட்டு ரூபாய் முதல், 10 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
பொதுமக்களுக்கு,
கிலோ, 15 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். ஒரு கீற்று, 5 ரூபாய் மற்றும்,
10 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். தற்போது, பாலக்கோடு பகுதியில்
ஏராளமான வியாபாரிகள் தர்பூசணி பழங்களை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் வியாபாரிகளிடம் இருந்து தர்பூசணி பழங்களை ஆர்வத்துடன் வாங்கி
செல்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.