தர்மபுரி: தர்மபுரி ஆர்.ஆர்., கிரானைட்ஸ் நிறுவனத்தின் சார்பில், ஆர்.ஆர்., டயர்ஸ் புதிய நிறுவனம் துவக்க விழா நடந்தது.சேலம் ரோடு, பாரதிபுரம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்நிறுவனம் எம்.ஆர்.எஃப்., டயர்ஸ் பிரத்யோக ஷோரூமை எம்.ஆர்.எப்., மண்டல மேலாளர் இவான் ஆஸ்வால்டு திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பாலக்கோடு எம்.எல்.ஏ., அன்பழகன் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.இங்கு அனைத்து இருகர வாகனம், மூன்று கரம் மற்றும் லாரி, பஸ் போன்ற வாகனங்களுக்கு எம்.ஆர்.எஃப்., டயர், டியூப், பிளாப் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. முதல் முறையாக உலக தரத்தில் ஜெர்மனி தொழில் நுட்பத்துடன், "3டி' வீல், அலைன்மென்ட் மற்றும் வீல் பேலன்சிங் மிஷின் நிறுவப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் வசதிக்காக, 24 மணிநேரமும் விற்பனையும், முற்றிலும் "ஏசி' அமைக்கப்பட்டுள்ளது.பஸ், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி கல்லூரி தாளாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை ஆர்.ஆர்., குரூப் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ராஜவேல், சதீஷ்குமார் மற்றும் குடும்பத்தினர், ஊழியர்கள் செய்திருந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.