தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஜன.,20) 923 மையங்கள் மூலம் போலியோ சொட்டு
மருந்து வழங்கப்படுகிறது.தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகளை போலியோ நோய்
தாக்குதலில் இருந்து பாதுகாக்க நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும், 923 மையங்களிலும், பஸ் ஸ்டாண்ட்,
ரயில்வே ஸ்டேஷன் ஆகிய பகுதிகளில், 24 மொபைல் மையங்களும், மலைகிராமங்கள்
உள்ள குழந்தைகளுக்கு, 22 நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி
கூறியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை, 7 மணி முதல், மாலை 5 மணி
முதல் மாவட்டத்தில் உள்ள ஐந்து வயதிற்கு உட்பட்ட, ஒரு லட்சத்து, 60 ஆயிரம்
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
இரண்டு லட்சம்
குழந்தைகளுக்கு வழங்க தேவையான சொட்டு மருந்து தற்போது பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்குவது குறித்து வாகனங்களில் ஒலி
பெருக்கிகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையத்திலும்,
தலா, நான்கு பேர் பணிபுரிவார்கள்.