காவேரிப்பட்டணம்: வயிற்று வலியால்
அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து
கொண்டார்.காவேரிப்பட்டணம் அடுத்த தேர்ப்பேட்டையை சேர்ந்தவர் மஞ்சுநாத், 30.
இவர் கடந்த சில ஆண்டுகளாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். டாக்டரிடம்
காண்பித்தும் மருந்து சாப்பிட்டும் வலி நிற்கவில்லை.
மனமுடைந்த அவர்
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கிய நிலையில்
இருந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு
மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
இறந்தார். காவேரிப்பட்டணம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.