தர்மபுரி: தர்மபுரியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.தர்மபுரி நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் குப்பைகள் மற்றும் சாக்கடை கால்வாய்களை துப்புரவு செய்யும் பணியில், 90க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய அக்கரை காட்டாததால், பல பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக பஸ்ஸ்டாண்ட், நான்கு ரோடு பகுதியில் புதிய சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி கால தாமதம் ஆகிய வருகிறது.இதனால், அப்பகுதியில் குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்தி வருகிறது.இதே போன்று குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீரில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தர்மபுரி நகராட்சியில், மூன்றுக்கும் மேற்பட்ட கொசு மருந்து அடிக்கும் கருவிகள் இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் உள்ளதோடு, கொசு மருந்து அடித்ததாக செலவு கணக்கு மட்டும் காட்டப்பட்டு வருகிறது. இதனால், நகரில் கொசு தொல்லை கட்டுக்குள் வராமல், பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.பொதுமக்களின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து முறையாக அடிக்க வேண்டும். கொசு மருந்து அடிப்பது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும், என்றும் பொதுநல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.