DISTRICT NEWS | திறந்த வெளிகளில் ஆடுகள் வெட்டி விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறந்த வெளிகளில் ஆடுகள் வெட்டி விற்பனை

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

ஓசூர்: ஓசூர் நகராட்சி நவீன ஆடு அடிக்கும் தொட்டியில் டோக்கன் பெறாமல், இறைச்சி கடைகளில் திறந்த வெளியில் ஆடுகள் வெட்டப்படுகிறது. இதனால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.ஓசூர் நகராட்சி பகுதியில் திறந்த வெளியில் ஆடுகளை வெட்டுவதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்க கடந்த, 2007-08ம் ஆண்டு எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டி கட்டப்பட்டது.
இறைச்சிக்கடைக்காரர்கள், ஆடுகளை இங்கு உயிருடன் கொண்டு வந்து கால்நடை மருத்துவர் பரிசோதனையில் நோய் தாக்காத ஆடு என தெரிவித்த பின் நகராட்சி "சீல்' வைத்து ஆடுகளை வெட்டி விற்பனை செய்ய வேண்டும் என விதிமுறையுள்ளது.இந்த ஆடு அடிக்கும் தொட்டியில் பரிசோதனை செய்து வெட்ட ஒரு ஆட்டுக்கு, 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆடு அடிக்கும் தொட்டியில் கால்நடை மருத்துவர், ஆடுகளை பரிசோதனை செய்ய வருவதில்லை எனவும், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் நகராட்சி முழுவதும், 45 வார்டுகளிலும் நகராட்சி விதிமுறைகளை மீறி ஆடுகள் திறந்த வெளியில் வெட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

ஆடு அடிக்கும் தொட்டியில் தினசரி வெட்டப்படும் சொற்ப ஆடுகளும், கால்நடை மருத்துவர் பரிசோதனையில்லாமல், வெட்டப்படுகிறது. நகராட்சி பகுதியில், 300க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன.இந்த கடைகளில் தினம், 800க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படுகின்றன. சனி, ஞாயிறு மற்றும் விழா காலங்களில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படுகிறது. ஆனால், ஆடு அடிக்கும் தொட்டியில் தற்போது, பெயரளவுக்கு தினம் சராசரியாக, 70 ஆடுகள் மட்டுமே வெட்டப்படுகிறது.இறைச்சி கடைகளில் விற்பனையாகும், 80 சதவீதம் ஆடுகள் இறைச்சி கடைகளில் திறந்த வெளியில் வெட்டி "சீல்' இல்லாத இறைச்சிகளை விற்பனை செய்கின்றனர். நகராட்சி அதிகாரிகள், இறைச்சி கடைகளில் வெட்டப்படும் ஆடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக, இறைச்சி கடைக்காரர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.பொதுவாக ஆடு அடிக்கும் தொட்டியின் நோக்கமே, நோய் தாக்கிய, இறந்த ஆடுகளை வெட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்வதை தடுப்பதே ஆகும். ஆனால், தற்போது ஆடுகள் இறைச்சி கடைகளில் வெட்டி விற்பனை செய்வதால், ஆடு அடிக்கும் தொட்டி வெறிச்சோடி காணப்படுகிறது.

சில இறைச்சிக்கடைக்காரர்கள் மலிவு விலைக்கு நோய் தாக்கிய ஆடுகள், இறந்த ஆடுகளையும் வெட்டி விற்பனை செய்வதாக பகிரங்க புகார் எழுந்துள்ளது. மேலும், திறந்தவெளியில் ஆடுகளை வெட்டுவதால், கடும் சுகாதார சீர்கேடும், பொதுமக்களுக்கு பல்வேறு மர்ம நோய்களும் பரவுகிறது.நகராட்சி அதிகாரிகள் இறைச்சிக்கடைக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுவதால் பெயரளவுக்கு செயல்படும் ஆடு அடிக்கும் தொட்டியை யாரும் ஏலம் எடுக்க முன் வரவில்லை. இதனால், கடந்த ஆண்டு ஆடு அடிக்கும் தொட்டியில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் உரிமையை 7, லட்சத்து 77 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்தாண்டு வெறும், 2 லட்சத்து, 62 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போனது. இதனால், நகராட்சிக்கு, 5 லட்சம் ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை