கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜன.,20) 951 மையங்களில் போலியோ சொட்டு
மருந்து வழங்கப்படுகிறது.கலெக்டர் ராஜேஸ் வெளியிட்ட அறிக்கை:
கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் இன்று முதல் சுற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.
மாவட்டம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், துணை
சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பஸ், ரயில்வே
ஸ்டேஷன்களில், 951 மையங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
சுகாதார
துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளை சார்ந்த, 3 ஆயிரத்து, 804 பணியாளர்கள்
சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
முகாம் காலை, 7 மணிமுதல்
மாலை 5 மணி வரையிலும், பஸ் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில், 24 மணி நேரமும்
நடக்கிறது.போலியோ சொட்டு மருந்து வழங்க நடமாடும் முகாம்களும்
அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறு இடங்களில் இருந்து பணி மற்றும்
வியாபாரம் நிமித்தமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமான
பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர்கள், பொம்மை விற்பனையாளர்கள்
மற்றும் இலங்கை தமிழர்கள் உள்பட ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 808
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.பெற்றோர்கள் தங்களது ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து
குழந்தைகளுக்கும் ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும்
இன்றும் தவறாமல் போலியோ சொட்டு மருந்தை போட்டுக்கொள்ள வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.