Advertisement
ஓசூர் நோக்கி முன்னேறும் யானைகளால் மக்கள் பீதி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2013,01:38 IST

ஓசூர்: ஓசூர் புறநகர் மலைக்கிராமங்களில் சுற்றிதிரியும் யானைகள், ஓசூரை நோக்கி படிபடியாக முன்னேறி வருவதால், பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
ஓசூர் அருகே ஊடேதுர்க்கம், சானமாவு, தேன்கனிக்கோட்டை காப்பு காடுகளில் தற்போது காட்டு நடமாட்டம் அதிகளவு உள்ளன. இந்த யானைகள், சானமாவு, சூளகிரி மற்றும் உத்தனப்பள்ளி சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் கடந்த மூன்று மாதமாக அட்டகாசம் செய்து வருகின்றன.வனத்துறையினர், பட்டாசு வெடித்தும், தீ பந்தங்கள் ஏந்தியும் பலமுறை காட்டிற்குள் விரட்டியும் மீண்டும் யானைகள் மலைக்கிராமங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. பகல் முழுவதும் காட்டுக்குள் காணப்படும் யானைகள், இரவு மலைக்கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சாப்பிட்டு செல்கின்றன.நேற்று முன்தினம் இரவு, 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், ஓசூர் அருகே பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தன. பீர்ஜேப்பள்ளி, சானமாவு உள்ளிட்ட சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு மட்டும், 20 ஏக்கர் விவசாய பயிர்களை யானைகள் அழித்து சென்றுள்ளன.ஓசூருக்கு மிக அருகில் பீர்ஜேப்பள்ளி காணப்படுவதால், பீர்ஜேப்பள்ளி வந்த யானைகள் ஓசூரை நோக்கி படையெடுக்க அதிக நேரம் ஆகாது. கடந்த மூன்று ஆண்டிற்கு முன் சூளகிரி மேல்மலையில் இருந்த சிறுத்தை புலி ஒன்று, ஓசூர் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது. வனத்துறையினர், பெரும்பாடு பட்டு மயக்க ஊசி போட்டு பிடித்து சென்றனர்.அதேபோல், காட்டு யானைகள் ஓசூர் நகரில் புகுந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அதனால், வனத்துறையினர் யானைகளை விரைவில் அடர்ந்த காட்டிற்கு விரட்டவும், யானைகள் நிலையாக காடுகளை விட்டு வெளியேறாமல் தடுக்க மின்வேலி போடாத இடங்களில் மின்வேலி போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.