கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சிட்கோ தொழிற்பேட்டையில், புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை வனத்துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் லண்டன் பேட்டை அருகே சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, 60க்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பூங்கா சீரமைக்காமல் உள்ளதால் பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பூங்காவில் உள்ள மரத்தில் சாரை பாம்பு ஒன்று இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.சிட்கோ தொழிற்பேட்டையில் அரசுக்கு சொந்தமான பர்னீச்சர் செய்யும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு, 9 மணி அளவில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த போது, அந்த பகுதியில் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்ததை பார்த்துள்ளனர்.பார்பதற்கு மலை பாம்பு போன்று இருந்ததால் தொழிலாளர்கள் பாம்பை அடிக்காமல் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் வழக்கம் போல் மலைபாம்பை கையில் பிடிக்க முயற்சி செய்தனர்.பாம்பு சீரியதை பார்த்து சந்தேகமடைந்த வனத்துறையினர் வெளிச்சத்தில் பாம்பை பார்த்தனர். அப்போது, அந்த பாம்பு மலைபாம்பு இல்லையென்பதும் அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்பதும் தெரியவந்தது.இதனையடுத்து வனத்துறையினர் கண்ணாடி விரியன் பாம்பை பாதுகாப்பாக பிடித்து சாக்கு பையில் கட்டி நாரலப்பள்ளி காப்புக்காட்டில் விட்டனர். இந்த பகுதியில் புதர்கள் மண்டியுள்ளதால் அடிக்கடி தொழிற்சாலைகளுக்குள் கொடிய விஷபாம்புகள் வருவதால் சிட்கோ நிர்வாகம் புதர்களை அழிக்க வேண்டும் என தொழிற்சாலையில் பணியாற்றுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.