DISTRICT NEWS | செப்டிக் டேங்கில் சிறுமி பலி: மேலும் ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செப்டிக் டேங்கில் சிறுமி பலி: மேலும் ஒருவர் கைது

Added : ஜன 20, 2013
Advertisement

ஊத்தங்கரை: ஊத்தங்கரை தனியார் பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து எல்.கே.ஜி., மாணவி இறந்த சம்பவத்தில், பள்ளி விடுதி வார்டனை போலீஸார் கைது செய்தனர். பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டி கிறிஸ்து மெட்ரிகுலேஷன் பள்ளியில் நேற்று முன்தினம் எல்.கே.ஜி., மாணவி மாலதி, 4, பள்ளி வளாகத்தில் உள்ள செப்டிங் டேங்கில் விழுந்து பரிதாபமாக டறந்தார்.இது தொடர்பாக பள்ளி முதல்வர் மெர்சி 32, அவரது சகோதரர் ஸ்டீபன் 29, நிர்வாக அலுவலர் பிரபாகரன் 40 ஆகிய மூன்று பேரை உடனடியாக போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது அஜாகரதையாக இருந்து உயிர் இழப்பை ஏற்படுத்தியதாக, 304 செக்ஷன் கீழ் வழக்குபதிவு செய்தனர்.இதனிடையே பள்ளி விடுதி வார்டன் ரமேஷை, 26, நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர். இறந்த மாணவி மாலதியின் உடல் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோர்களின் சொந்த ஊரான கட்டமடுவு கிராமத்துக்கு நேற்று அதிகாலை கொண்டு செல்லப்பட்டு பகல், 11 மணி அளவில் மாலதியின் உடல் எரியூட்டப்பட்டது.

கட்டமடுவு கிராமத்துக்கு எந்த அதிகாரியும் போகவில்லை.சம்பவம் நடந்த பள்ளிக்கு சென்று தனியார் பள்ளி கூட்டமைப்பு நிர்வாகிகள் பார்வையிட்டனர். செப்டிக் டேங்கை மூடியிருந்த சிலாப்பின் மேல் மின் மோட்டார் இருந்துள்ளதாகவும், இந்த மின்மோட்டாரை பழுது பார்க்க சிலாபையும் எடுத்தவர்கள் மீண்டும் அதனை மூடாமல் விட்டதாகவும் பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் மெட்ரிக் பள்ளியின் ஆய்வாளர் ஆய்வு நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே பள்ளி காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி வாளகத்தில் உள்ள விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று காலை முதல் பெற்றோர்களுடன் விடுதி மாணவர்களை பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனுப்பி வைத்து வருகின்றனர்.செப்டிக் டேங்கில் விழுந்து இறந்த மாணவி மாலதி மற்றும் அவரது சகோதரர் பிரவீன் ஆகியோர் இந்த ஆண்டுதான் சி.பி.எஸ்.சி., பிரிவில் சேர்ந்துள்ளனர். பள்ளியில் இந்த ஆண்டுதான் சி.பி.எஸ்.சி., வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளது.ஸ்டேட் போர்டு வகுப்புகளில் சேரும் மாணவர்களை காட்டிலும் சி.பி.எஸ்.சி., பாடப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு பெற்றோர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை