சேலம்: சேலம் மாவட்டத்தில், வளர்ச்சிப் பணிகள் குறித்து, தமிழக சட்டசபை ஏடுகள் குழு தலைவர் தலைமையிலான உறுப்பினர்கள், இரண்டு நாட்கள் முகாமிட்டு, ஆய்வுப் பணி மேற்கொள்கின்றனர்.தமிழக சட்டசபை ஏடுகள் தலைவர் சின்னசாமி தலைமையில், 20 பேர் கொண்ட உறுப்பினர்கள், நாளையும், நாளை மறுநாளும், சேலம் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, ஆய்வுப் பணி மேற்கொள்கின்றனர்.நாளை (ஜன.,21) காலை, சேலம் சுற்றுலா மாளிகையில், ஏடுகள் குழு கூட்டம், 9.30 மணிக்கு நடக்கிறது. இதில், ஏடுகள் குழு தலைவர் சின்னசாமி, உறுப்பினர்கள் தமிழரசன், நடராஜ், தினகரன், நாகராஜன், மணிமாறன், அண்ணாதுரை, குரு உள்பட, 20 உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.நாளை காலை, 10 மணிக்கு, தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தையும், மதியம், 3 மணிக்கு, மேக்னசைட் நிறுவன செயல்பாடுகள் குறித்தும், அதிகாரிகளுடன் கலந்தாலோசனையில் ஈடுபடுகின்றனர்.நாளை மறுநாள், ஏற்காட்டில் உள்ள முக்கிய இடங்களில், ஏடுகள் குழு ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த தகவலை, கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.