வேலூர்:
""அதிக செய்தி சேனல்கள், இணையதளங்கள் வந்த போதும், பத்திரிகை துறைக்கு
பாதிப்பு இல்லை,'' என, இங்கிலாந்து, "வான் இப்ரோ' தலைவர் கூறினார்.
வேலூர்
வி.ஐ.டி., பல்கலையில், மாணவர் நலன் துறையின் சார்பில் நவீன ஊடகம்,
பாரம்பரிய ஊடகம் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. வி.ஐ.டி.,
இணை துணைவேந்தர் நாராயணன் வரவேற்றார்.இங்கிலாந்து நாட்டு, பாரீஸ் வான்
இப்ரோ அமைப்பின் ஆலோசனை குழு தலைவரும், ஏபீபி பிரைவேட் லிமிடெட் நிறுவன
மேலாண்மை இயக்குனருமான புர்காய்ஸ்தா பேசியதாவது:வளர்ந்து வரும்
தொழில்நுட்ப வளர்ச்சியால், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில், பத்திரிகை
படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆசிய கண்டத்தில் பத்திரிகை
படிப்பவர்களின் மன நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லை. மின்னணு ஊடகங்கள்,
செய்தி சேனல்கள், இணையதளங்களால் பத்திரிகை துறைக்கு எந்த விதத்திலும்
பாதிப்பு இல்லை.வரும், ஐந்து ஆண்டுகளுக்கு இதே நிலை நீடிக்கும். அடுத்த, 15
ஆண்டுகளில் இந்த நிலையை மாறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டாலும், பத்திரிகை துறை
பாதிக்காது. இந்தியாவில் நகரப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும்
பத்திரிகைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.இவ்வாறு அவர்
பேசினார்.வி.ஐ.டி., மாணவர் நலன் இயக்குனர் கண்ணபிரான் நன்றி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.