ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனை ஆய்வுக்குப்பின், பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். ஜி.ஹெச்.,சில் சாலை வசதியை மேம்படுத்த, 40 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக தெரிகிறது. முதற்கட்டமாக, பத்து லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கும்.அரசு மருத்துவமனையை, மருத்துவக்கல்லூரியாக தரம் உயர்த்த, அரசு டாக்டர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசிடம் தெரிவிக்கப்படும்.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை அமைக்க, முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்த காலத்திலேயே திட்டம் வகுக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், வள்ளுவர் சிலை அமைக்க டெண்டர் விடப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க., ஆட்சியின் போது, சிலை அமைக்கப்பட்டது.இதனை தி.மு.க., தலைவர் கருணாநிதி மறுப்பது உண்மையல்ல. தவறாக கூறுகிறார். தமிழ் மக்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அதிக அக்கறை கொண்டவர், முதல்வர் ஜெயலலிதா. தி.மு.க., தலைவர் கருணாநிதி ஒரு தீயசக்தி, என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.