"ஆண்டுக்கு, ஆறு ச மையல் காஸ் சிலிண்டர்களை மட்டும் மானிய விலையில் வழங்குவோம்' என்ற முடிவில் இருந்து, மத்திய அரசு இறங்கி வந்து, ஒன்பது சிலிண்டர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால், "இந்த அறிவிப்பு போதாது.
ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு, மாதத்திற்கு ஒரு சிலிண்டர் அவசியம் தேவை என்பதால், 12 ஆக உயர்த்த வேண்டும்' என, நடுத்தர குடும்பத்தின் குரல் வலுவாக ஒலிக்கிறது. மூன்று மாநில தேர்தல், லோக்ச பா தேர்தல் என தேர்தல் கணக்கை முன்னிறுத்தியே, சிலிண்டர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் வாதங்களை முன் வைக்கின்றன. காங்கிரசின் தேர்தல் கணக்கு பலிக்குமா என்பது குறித்து, தமிழக அரசியல் கட்சிகளின் பிரபலங்கள் முன்வைத்த வாதங்களின் தொகுப்பு:
அ.தி.மு.க., அரசு ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே, ச மையல் காஸ் சிலிண்டர் விலையை, மத்திய அரசு உயர்த்தியது. இதனால், மக்களுக்கு சுமை அதிகரிக்கக் கூடாது என்பதால், ச மையல் காஸ் சிலிண்டருக்கு விதிக்கப்படும், 14 சதவீகித மதிப்புக் கூட்டு வரியை, தமிழக அரசு ரத்து செய்ததோடு, இந்த வரியை, தமிழக அரசே செலுத்தும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இப்போது, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை, வினியோகத்தை, எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம்; அரசு இதில் தலையிடாது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மானிய விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டருக்கும், கட்டுப்பாடு விதித்துள்ளது.மக்களுக்கு செய்யவேண்டிய கடமையிலிருந்து, மத்திய அரசு விலகுவதையே, இச்செயல்கள் காட்டுகின்றன. மத்திய அரசில் அங்கம் வகிக்கும், தி.மு.க., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், வாய்மூடி மவுனியாக இருந்து, தமிழக மக்களுக்கு துரோகம் செ ய்து வருகின்றன.தமிழகத்துக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய்
ஒதுக்கீட்டையும், மத்திய அரசு குறைத்துள்ளதையும், இவர்கள் தட்டிக் கேட்கவில்லை. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதில் தோல்வியடைந்துள்ளதன் மூலம், மத்திய அரசின், நிர்வாகத் திறமையின்மையும், ஊழலும் வெளிச்ச த்திற்கு வந்துள்ளது.கோகுல இந்திரா,தமிழக சுற்றுலா துறை அமைச்சர்
பாதுகாப்பான சமையல், நேரத்தை மிச்சப்படுத்துதல் போன்றவற்றுக்காக, காஸ் சிலிண்டர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இப்போது, சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து, மக்கள் வயிற்றில் அடிக்கும் செயலை அரசு மேற்கொண்டுள்ளது.ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போது, மனுசனை கடிக்க, மத்திய அரசு தயாராகி விட்டது. ஆண்டுக்கு, 6 சிலிண்டர்கள் என அறிவித்து, மக்கள் கோபத்தை சம்பாதித்த மத்திய அரசு, கொஞ்சம் இறங்கி வந்து, 9 சிலிண்டர் என, அதிகரித்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து எடுக்கும் நடவடிக்கைகளால், மக்களின் கோபம் தீரப்போவதில்லை.காங்., ஆளும் மாநிலங்களுக்கு, தேவையான வச திகளை, மத்திய அரசு உடனடியாக செய்து தருகிறது. அதனால், அவர்களால், கூடுதலாக, 3 சிலிண்டர்களை, மானிய விலையில் பெற முடிகிறது.ஆனால், தமிழகத்துக்கு, மண்ணெண்ணெய்
ஒதுக்கீட்டை நாளுக்கு நாள் குறைத்து வருகிறது. தங்களை அண்டியிருக்க வேண்டும் என, மாநில அரசுகளை, மத்திய அரசு மிரட்டுகிறது.மத்தியில் பா.ஜ., அரசு இருந்தபோது, தாராளமாக சிலிண்டர்களை வழங்கியது. இப்போது காங்., அரசால் முடியவில்லை என்றால், நிர்வாக சீர்கேடும். அன்னிய முதலாளிகளுக்கு, சிவப்பு கம்பளம் விரிப்பதுமே, இதற்கு காரணம்.
வானதி சீனிவாசன், மாநில செயலர், பா.ஜ.,
மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும், ச மையல் "காஸ்' சிலிண்டர்களை, வர்த்தக உபயோகத்துக்கு பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு, பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, எந்த நோக்கத்துக்காக, மானிய விலையில் சிலிண்டர் அளிக்கப்படுகிறதோ, அந்த நோக்கம் நிறைவேறுவதில்லை.
எனவே, மானிய விலையில் அளிக்கப்படும் காஸ் சிலிண்டர்களுக்கு, கட்டுப்பாடு விதிப்பதாக, எண்ணெய் நிறுவனங்கள் கூறும் கருத்தும் ஏற்புடையதாகவே உள்ளது.தற்போது, மத்திய அரசு அறிவித்துள்ள, மானிய விலையில், ஆண்டுக்கு, 9 காஸ் சிலிண்டர்கள் என்பது போதுமானது அல்ல. மாதத்துக்கு ஒன்று என, ஆண்டுக்கு, 12 காஸ் சிலிண்டர்களை, மானிய விலையில் அளித்தால் தான், நடுத்தர குடும்பங்களின் எரிபொருள் தேவை பூர்த்தியாகும்.
காங்., ஆளும் மாநிலங்களில், கூடுதலாக, 3 சிலிண்டர்களை, அம்மாநில அரசு வழங்கும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, எத்தனை காங்., அரசுகள் ஏற்றுக் கொண்டன என, இதுவரை தெரியவில்லை.அவ்வாறு, காங்., ஆளும், மாநில அரசுகள் செ ய்யுமானால், தமிழக அரசும், மானிய விலையில், காஸ் சிலிண்டர்களை கூடுதலாக அளிக்க முன் வரலாம். சுப்புலட்சுமி ஜெகதீசன், உயர்மட்டக் குழு உறுப்பினர், தி.மு.க.,
சிலிண்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் கடன் சுமையும் அதிகரித்துவிட்டது. இந்நிலையில், மானிய விலையில் அளிக்கும், சிலிண்டரின் எண்ணிக்கையை, மத்திய அரசு குறைத்துள்ளது.இருந்தாலும், ஆண்டுக்கு மானிய விலையில், 9 சிலிண்டர் என்பதை, 12 சிலிண்டராக உயர்த்த வேண்டும். நான்கு பேருக்கு அதிகமாக உள்ள, பெரிய குடும்பங்களுக்கு, மேலும் மூன்று சிலிண்டர்களை கூடுதலாக, மானிய விலையில், அரசு அளிக்க வேண்டும் என, தமிழக காங்., சார்பில், மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். காங்., ஆளும் மாநிலங்களில், மேலும் மூன்று சிலிண்டர்களை, மானிய விலையில் அளிக்க முடிவு செ ய்யப்பட்டுள்ளது. இதற்காகும் செலவை, மாநில அரசுகள் ஏற்றுக்கொள்கின்றன. தமிழக அரசும், இதுபோல செய்யவேண்டும் என, எதிர்பார்க்கிறோம்.பணக்காரர்கள், மக்கள் பிரதிநிதிகள், மானிய விலையில் சிலிண்டர் வாங்குவதை கைவிட்டுவிட்டு, சந்தை விலையில் வாங்க வேண்டும் என, கோரிக்கை எழுகிறது.எம்.எல்.ஏ., என்ற முறையிலும், வழக்கறிஞர் என்ற வகையிலும், மானிய விலையில், சிலிண்டர் வாங்குவதை கைவிட்டு, சந்தை விலையில் வாங்குவேன் என, உறுதி அளிக்கிறேன்.
விஜயதாரணி,எம்.எல்.ஏ., காங்கிரஸ்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
விலை ஏற்றத்தால் அவதிக்குள்ளவது பெண்களே. சராசரி சிந்திக்க தெரிந்த எந்த பெண்ணும் சொனியாவுக்கோ, மன்மோகன் சிங்கிர்க்கோ, சிதம்பரத்திர்க்கோ நிச்சயம் வாக்களிக்க மாட்டார்கள். எம் என் ஆர் ஈ ஜி ஏ என்ற பெயரில் வரிப்பணம் வீணாக்க படுகிறது. அது அடுத்த தேர்தலில் வாக்குகளை பெற லஞ்சம். விவசாயக்கடன் தள்ளுபடிக்காக அற்பதி எட்டாயிரம் கோடி ஒதுக்கினார்கள். அதனால் விவசாயி தற்கொலை குறைந்ததா. காங்கிரஸ் கட்சி பொது மக்கள் வரிப்பணத்தை லஞ்சம் கொடுத்து வாக்கு சேகரிக்க பார்க்கிறது. எச்சரிக்கையாய் இருங்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.