ஈரோடு:
ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் ராமலிங்கம்,
""சி.டி.ஸ்கேன் பணிகளை விரைந்து முடிக்க,'' உத்தரவிட்டார்.ஈரோடு அரசு
மருத்துவமனையில் நேற்று, பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் ஆய்வு
செய்தார். ஆண்கள், பெண்கள் வார்டு, பச்சிளங்குழந்தைகள் பிரிவு, அவசர
சிகிச்சை பிரிவு, சித்தா பிரிவு, காசநோய் பிரிவு பகுதி உள்பட பல வார்டுகளை
அமைச்சர் ராமலிங்கம் ஆய்வு செய்தார்.ஜி.ஹெச்.சில் பல மாதமாக நடந்து வரும்
சி.டி.ஸ்கேன் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், பணிகளை தாமதப்படுத்தாமல்,
விரைந்து முடித்திட, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அரசு மருத்துவமனையில்
தண்ணீர் பிரச்னை, தேங்கி உள்ள குப்பைகள், கொசு உற்பத்தி உள்பட பல
புகார்களை, மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
புகாரின் பேரில்,
உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர்
உத்தரவிட்டார்.மாநகராட்சி கமிஷனர் விஜயலட்சுமி, துணைமேயர் பழனிச்சாமி,
மண்டல தலைவர் மனோகரன், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார்
உள்பட பலர் உடனிருந்தனர்.அரசு மருத்துவர் சங்க மாவட்ட செயலாளர்
ரவிச்சந்திரபிரபு, பொருளாளர் ஜெகன்மோகன் ஆகியோர், "அரசு மருத்துவமனையை,
மருத்துவக்கல்லூரியாக்க வேண்டும், என்றும், தனியார் மருத்துவமனைக்கு நிகராக
அரசு மருத்துவமனையில் நவீன கருவிகள் அமைக்க வேண்டும்,' என பல கோரிக்கைகள்
அடங்கிய மனுவை அமைச்சர் ராமலிங்கத்திடம் வழங்கினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.