கோபிசெட்டிபாளையம்:
கவுந்தபாடி தம்பிக்கலை ஐயன் ஸ்வாமி கோவிலில் ஜனவரி, 23 தேதி கும்பாபிஷேக
விழா நடக்கிறது.கவுந்தபாடி அருகே தம்பிக்கலை ஐயன் ஸ்வாமி கோவில் உள்ளது.
கோவிலில் உள்ள விநாயகர், அன்னபூரணி உடனமர் நீலகண்டேஸ்வரர், தம்பிக்கலை ஐயன்
ஸ்வாமி, நாகேஸ்வரி அம்மன் ஸ்வாமிக்கு ஜனவரி, 23ம் தேதி கும்பாபிஷேக விழா
நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மாலை, 6 மணிக்கு விநாயகர்
வழிபாடு, புண்யாகம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், தீபாராதனை
நடக்கிறது.நாளை காலை, 7 மணிக்கு மகாகணபதி ஹோமம் மற்றும் யாக பூஜைகள்
நடக்கிறது. 23ம் தேதி அதிகாலை, 4.30 மணிக்கு நான்காம் கால பரிவார யாக
வழிபாடு, 5 மணிக்கு அன்னபூரணி நீலகண்டேஸ்வரர் விமான கோபுர கும்பாபிஷேகம்,
காலை, 6 மணிக்கு அம்பாளுக்கு கும்பாபிஷேகம், காலை, 7 மணிக்கு பரிவார
மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், கோபுர கும்பாபிஷேகம், காலை, 7.30 மணிக்கு
மேல் தம்பிக்கலை ஐயன் ஸ்வாமி யாக பூஜை துவக்கமும், காலை, 10 மணிக்கு
ராஜகோபுரம், தம்பிக்கலை ஐயன் ஸ்வாமி விமான கோபுரம் கும்பாபிஷேகம், காலை, 10
மணிக்கு சித்தர் தம்பிக்கலை ஐயன் ஸ்வாமி மகா கும்பாபிஷேகம், தீபாராதனை,
அன்னதானம் நடக்கிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.