குறிச்சி:குனியமுத்தூரை அடுத்த விஜயலட்சுமி மில்ஸ் பஸ் ஸ்டாப் பகுதியில், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பள்ளிச்சிறுவர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.குனியமுத்தூரை அடுத்த பி.கே.புதூர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் லூயிஸ். இவரது மகன் சாம் லூயிஸ், 10; கோவைபுதூரிலுள்ள டி.வி.சேகரன் நினைவு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அதுபோல, சபரி என்ற சிறுவன், சாந்தி ஆஸ்ரம் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.
இருவரும், அதே பகுதியை சேர்ந்த வேணுகோபால், 29 என்பவரின் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று, வருவர்.வழக்கம்போல, நேற்றும் பள்ளிக்கு சென்று, மாலை ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக்கொண் டிருந்தனர். கோவை -பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில், விஜயலட்சுமி மில்ஸ் பஸ் ஸ்டாப்பை தாண்டி செல்லும்போது, வேணுகோபால், முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றார். எதிரே மற்றொரு வாகனம் வந்ததால், திடீரென பிரேக் போட்டு, ஆட்டோவை நிறுத்தினார்; ஆட்டோ கவிழ்ந்து, விபத்துக்குள்ளானது. அப்பகுதியிலிருந்தோர், சிறுவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.சாம்லூயிஸ், கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. சபரி, சிறு காயமடைந்தான். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், ஆட்டோ டிரைவர் வேணு கோபால், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரிந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீசார், வேணுகோபாலை கைது செய்தனர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.