கோபிச்செட்டிபாளையம்:
கோபி அருகே நாகர்பாளையத்தில் சேர்ந்த பெண்கள் மழை வேண்டி, கடுமையான விரதம்
மேற்கொண்டு கும்மியடித்து வழிபாடு செய்து வருகின்றனர்.கோபி சுற்று
வட்டாரத்தில் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ்பவானி பாசன பகுதிகளில்
பவானிசாகர் அணையில் இருந்து விடப்படும் தண்ணீரை கொண்டு விவசாயம்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக
கொண்டே மானாவாரி நிலங்கள் உள்ளது.கடந்தாண்டில், பருவ மழை இல்லாததால், கோபி
சுற்று வட்டாரத்தில் உள்ள ஏரிகள், குளம், கசிவுநீர் குட்டைகள்
வறண்டுள்ளது.
நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. விவசாய
கிணறுகளில் தண்ணீர் குறைந்து வருவதால் மானாவாரி நிலங்கள் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ளம், சஞ்சீவிராயன் ஏரி,
ஓடத்துறை ஏரி, தண்ணீர்பந்தல் ஏரி, குண்டேரிப்பள்ளம் அணை, அனந்தசாகர் ஏரி,
வரட்டுபள்ளம் அணை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வீழ்ச்சியாக காணப்படுகிறது.
சென்ற ஆண்டில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படாததால் விளை பொருட்களின்
உற்பத்தி குறைந்து விட்டது. விளை நிலங்களில் மானாவாரியாக உள்ளதால்
விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவரும் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளனர். கோபி நாகர்பாளையத்தை சேர்ந்த பெண்கள், மழை வேண்டி
கடுமையான விரதம் இருந்து கும்மியடித்து வழிபாடு செய்து
வருகின்றனர்.நாகர்பாளையத்தில் உள்ள குடும்பத்தில் உள்ள பெண்களும் கடந்த,
17ம் தேதி முதல் கடும் விரதம் மேற்கொண்டனர். ஒவ்வொரு வீட்டிலும் எச்சில்
படாத சோறு வாங்கி வரப்பட்டு, விநாயகர் உருவம் வரையப்படுகிறது. விநாயகரை
சுற்றி பெண்கள் கும்மியடித்து வழிபாடு செய்கின்றனர். கடந்த, 17ம் தேதி
துவங்கிய இவ்வழிபாடு தைப்பூசம் வரை, 11 நாட்கள்
நடத்தப்படுகிறது.கும்மியடித்து வழிபாடு செய்யும் பெண்கள் கூறியதாவது:
சென்ற
பத்தாண்டு முன் இதுபோன்று மழை இன்றி இருந்தது. கும்மியடித்து வழிபாடு
செய்யப்பட்டதை தொடர்ந்து மழை பெய்தது. பத்தாண்டு பின், இப்பகுதியில்
வழிபாட்டில் இறங்கி உள்ளோம். நாகர்பாளையத்தில் உள்ள ஒவ்வொரு வீடு
சார்பிலும் ஒரு பெண்கள் கடும் விரதம் மேற்கொள்கின்றனர். கெட்ட
காரியத்துக்கு செல்ல மாட்டோம்.ஒவ்வொரு வீட்டில் இருந்து எச்சில்படாத சோறு
வாங்கி வந்து, விநாயகர் உருவம் செய்யப்படுகிறது. விநாயகர் உருவம் வரைந்து
கும்மியடித்து வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இரவில், 7 மணிக்கு
துவங்கும் வழிபாடு இரவு, 11 மணி வரை நீடிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு
வகையான விநாயகர் சிலை வரையப்படும்.
வழிபாட்டு பின், பொது மக்களுக்கு
நிலாச்சோறு வழப்படுப்படுகிறது. அனைத்து வீடுகளில் இருந்து வாங்கி வரப்படும்
சோறு, மக்களுக்கு கொடுக்கப்படுவதால் மக்களிடம் கருத்து வேறுபாடு நீங்கும்.
17ம் தேதி துவங்கிய இவ்வழிபாடு, தைப்பூச வரை நடக்கும். தைப்பூசத்தன்று
தினைமாவு இடித்து விநாயகர் செய்து பவானியாற்றில் விடுவோம்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.