கோபிசெட்டிபாளையம்:
குடிபோதை தகராறில், இளம்பெண் தீக்குளித்தார்.கவுந்தப்பாடியைச் சேர்ந்தவர்
முனியப்பன், 32. பொதுப்பணித்துறையில் தினக்கூலி தொழிலாளியாக பணி
செய்கிறார்.இவருக்கும், பாலப்பாளையம் கவிதா, 27, என்பவருக்கும் கடந்த பத்து
மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்கள் கோபி வாய்க்கால் ரோட்டில்
குடும்பத்துடன் வசித்து வந்தனர்.முனியப்பனுக்கு குடிப்பழக்கம் அதிகம்.
இதனால், தினமும் குடித்துவிட்டு குடும்ப தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவில் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டதால், ஆத்திரம் அடைந்த கவிதா மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்றவைத்தார்.
தீக்காயத்தால்
அலறிய கவிதா, முனியப்பனையும் கட்டிப்பிடித்தார்.கவிதா படுகாயத்துடனும்,
முனியப்பன் லேசான காயத்துடன் கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில்
உள்ளார். கோபி போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.