covai district news | மொபைல்போன் நம்பர் தராதபெண்ணுக்கு கத்திக்குத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல்போன் நம்பர் தராதபெண்ணுக்கு கத்திக்குத்து

Added : ஜன 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:மொபைல்போன் நம்பரைக் கேட்டு பின்தொடர்ந்த ஆசாமியை தட்டிக் கேட்ட பெண் கத்தியால் குத்தப்பட்டார். போலீசார் விசாரித்து,அந்நபரை கைது செய்தனர்.
செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்; இவரது மனைவி பத்மாவதி,30. அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். வேலைக்கு செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் இவரை பின்தொடர்ந்த செல்வபுரம், கல்லாமேடு பகுதியைச் சேர்ந்த சித்திக்,34, மொபைல் போன் எண்ணை கேட்டு தொந்தரவு செய்தார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பத்மாவதி, தன்னை பின் தொடர வேண்டாம் என,எச்சரித்தார். இதில், ஆத்திரமடைந்த சித்திக் இரு நாட்களுக்கு முன், வேலையில் இருந்து திரும்பிய பத்மாவதியை வழிமறித்து, சிறிய கத்தியால் கீறினார். இதில் வலது கையில் காயம் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். செல்வபுரம் போலீசார் இதுபற்றி விசாரித்து, பெண்ணை வழிமறித்து கத்தியால் குத்திய சித்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை