கோபிசெட்டிபாளையம்:
கோபி அருகே வழித்தவறி வந்த புள்ளிமானை பொது மக்கள் பிடித்து வனத்துறையிடம்
ஒப்படைத்தனர்.கோபி சுற்று வட்டாரத்தில் உள்ள வனப்பகுதியில் கடுமையான
வறட்சி ஏற்பட்டுள்ளதால், வனத்தில் உள்ள வன விலங்குகள் ஊருக்குள்
வரத்துவங்கி உள்ளன. பள்ளியபாளையம் அருகே புதுகாலனி பகுதியில் நேற்று காலை
7.30 மணி அளவில் புள்ளிமான் ஒன்று வழித்தவறி வந்தது. மானை தெருநாய்க்கள்
துரத்தியதால் தப்பி ஓடிய மான், ஸ்பின்னிங் மில் காம்ப்பவுண்ட் இரும்பு
கம்பி வேலியில் சிக்கியது. மானின் கொம்பு சேதமடைந்ததால் ரத்த கசிவு
ஏற்பட்டது. வாய்க்கால் தடுப்பு சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த
தொழிலாளர்கள், வேலியில் சிக்கியிருந்த மானை மீட்டு, அப்பகுதியில் கட்டி
வைத்தனர்.
இது குறித்து கெட்டிசேவியூர் அ.தி.மு.க., கவுன்சிலர்
மகுடேஸ்வரனுக்கு தகவல் தெரிவித்தனர். கவுன்சிலர் வனத்துறைக்கு தகவல்
தெரிவித்தார்.காலையில், 8 மணிக்கு மீட்கப்பட்ட மானை, 11 மணிக்கு பிறகு வந்த
வன காப்பாளர் சரவணன், மீட்டுச் சென்றனர். மூன்று மணி நேரமாக மான்
துள்ளித்துள்ளி விழுந்ததில் சோர்வடைந்து காணப்பட்டது. மான் பிடிப்பட்டது
குறித்து தகவல் தெரிவித்தும் உடனடியாக வந்து மீட்டு செல்லாதது மக்கள்
மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.