கோவையில் இன்று "வாக்கத்தான்'எல்லோரும் வாங்க, சிறப்பிக்க
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை:"கோயம்புத்தூர் விழா 2013'வின் ஒரு பகுதியாக, இன்று "தினமலர்' நாளிதழ், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியா அமைப்பு சார்பில், கோவை நடைபயணம் (கோயம்புத்தூர் வாக்கத்தான்) நடக்கிறது.சர்வதேச அளவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கையில், நமது நாடு 37வது இடத்தில் உள்ளது. ஆனால், நமது நாட்டில் திடீர் இறப்புக்கான காரணங்கள் குறித்து கணக்கெடுக்கும்போது, முதலிடத்தை பிடித்திருப்பது மாரடைப்பு. இதனை தவிர்க்க, நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அற்புதமான பலனளிக்கும் என்கின்றனர், டாக்டர்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க நடை பயிற்சி, ஒரு பயணமாக, இன்று காலை 6.00 மணிக்கு, வ.உ.சி., பூங்காவில் துவங்குகிறது; ஹுசூர் ரோடு, ரேஸ்கோர்ஸ், சுங்கம், திருச்சி ரோடு, கிளப் ரோடு வழியாக மீண்டும் வ.உ.சி., மைதானத்தை வந்தடையும் வகையில், 5 கி.மீ., தூரத்துக்கு, இந்நடைபயணம் நடக்கிறது.இதனை "தினமலர்'நாளிதழ், இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மற்றும் யங் இந்தியா அமைப்பு, கே.ஜி., மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன. நடைபயணம் செல்லும் வழியில், கே.ஜி., மருத்துவமனை சார்பில், மருத்துவ உதவிக்கு 20 டாக்டர்கள் அடங்கிய குழுவும், 6 ஆம்புலன்ஸ் வாகனங்களும், பத்து முதல் 15 இடங்களில் குளுகோஸ் உள்ளிட்டவற்றை வழங்க, தாகம் தணிக்கும் மையங்களும் அமைக்கப்படுகின்றன.சத்யசாய் அமைப்பு, பிரம்மகுமாரிகள், கல்லூரி மாணவர்கள், தொழிற்சாலை மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரிவோர், முதியோர், குழந்தைகள் என பல தரப்பினரும் பங்கேற்கின்றனர்."பட்டம் பெற்றவர்கள் தொழில்முனைவோராக மாறவேண்டும்'
குறிச்சி:""பட்டம் பெற்றவர்கள் தொழில்முனைவோராக மாறவேண்டும்,'' என, கோவை குற்றவியல் மூத்த வழக்கறிஞர் ஏ.பி.ஜெயச்சந்திரன் பேசினார்.கோவைபுதூர் பிரிவிலுள்ள ஸ்ரீ.ஜி., கலை, அறிவியல் கல்லூரியில் நடந்த நிறுவனர் நாள் விழாவில், மொழித்துறைத்தலைவர் அருவி தேன்மொழி வரவேற்றார். கல்லூரி முதல்வர் சேகர் தலைமை வகித்தார். கோவை குற்றவியல் மூத்த வழக்கறிஞர் ஏ.பி.ஜெயச்சந்திரன் பேசுகையில்,"" கல்வி மட்டுமே ஒரு மனிதனை மேம்பாடு அடையச் செய்யும். பெண்கள் தன்னிறைவு அடைவதற்கும் கல்வியே முக்கியம் என்பதில், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர், இக்கல்லூரி துவங்க வழிகாட்டிய கோபாலசாமி அவர்கள். மாணவர்கள், கல்லூரி நாட்களில், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பட்டம் பெற்றவர்கள், வேலை தேடுபவர்களாக இல்லாமல், தொழில்முனைவோராக மாறி, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வளர வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து பல்வேறு போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். "தற்கொலை தீர்வல்ல', என்ற நாடகம் நடந்தது. பேராசிரியர் சிந்துஜா நன்றி கூறினார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்