கோவை:மத்திய அரசு அறிவித்துள்ள டீசல் விலை உயர்வை, உடனடியாக திரும்பப் பெற, சைமா கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா)தலைவர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:பஞ்சாலைகள் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து, மொத்த கொள்முதல் மூலம், டீசலை வாங்குகின்றன. அமலுக்கு வந்துள்ள விலை உயர்வால், கொள்முதல் விலையில், லிட்டருக்கு ரூ.11 ஆக டீசல் விலை அதிகரிக்கும். தமிழக ஜவுளி ஆலைகள் ஏற்கனவே, 50 சதவீத அளவுக்கு மின்பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க டீசலை உபயோகித்து, ஜெனரேட்டர்களை இயக்கி, உற்பத்தி செய்து வருகிறது.
மின்பற்றாக்குறை காரணமாக, ஜவுளித்துறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக, புதிய முதலீடுகள் வரவில்லை. டீசல் விலை உயர்வால், 40ம் நம்பர் நூலுக்கு விலையில், கிலோவுக்கு நான்கு ரூபாய் அதிகரிக்கும். இதனால், ஜவுளித்துறையின் பிற அங்கங்களான விசைத்தறி, கைத்தறி நெசவாளர்கள், ஆறு மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள்.
டீசல் விலை உயர்வால், உற்பத்தியை நிறுத்தவேண்டிய கட்டாயத்திற்கு, ஜவுளி ஆலைகள் தள்ளப்பட்டுள்ளன. மின் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படும் டீசல், பர்னஸ் ஆயில் போன்றவற்றின் மீதான வரிகளை அறவே நீக்க வேண்டும் என்று ஜவுளித்துறை கோரி வந்துள்ளது. ஆனால், மத்திய அரசு இதுவரை அதற்கு செவி சாய்க்கவில்லை.ஜவுளித்துறையை நம்பி இருக்கும், 91 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு, உடனடியாக டீசல் விலை உயர்வை, திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, தினகரன் தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.