ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த பிள்ளாநல்லூர் நகர இளைஞரணி சார்பில், ஸ்டாலின் சுழற்கோப்பை கிரிக்கெட் போட்டி, குருசாமிபாளையம் செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.போட்டியில், குருசாமிபாளையம், 85.ஆர்.கொமாரபாளையம், அணைப்பாளையம், ஆண்டகளுர்கேட், ஆட்டையாம்பட்டி, நவணி, தென்னமரத்துபாளையம், பிள்ளாநல்லூர், பாலபாளையம், பொன்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது.இறுதிப் போட்டியில், ஆட்டையாம்பட்டி அணி முதலிடமும், குருசாமிபாளையம் அணி இரண்டாமிடம் பெற்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு, ராசிபுரம் ஒன்றிச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவசேகரன் வரவேற்றார்.நகரச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். மத்திய இணை அமைச்சர் காந்திச்செல்வன், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கினார். மாவட்ட பொருளாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஸ்குமார், துணை அமைப்பாளர் ஆனந்த், பிள்ளாநல்லூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி வடிவேல், ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.