அமைச்சுப் பணியாளர்களாக மாறிய போலீஸார்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான போலீஸ் ஸ்டேஷன்களில், போதுமான எண்ணிக்கையில் போலீஸார் இல்லை. அதன் காரணமாக குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வுகாண போலீஸ் எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளர் போல் பணிபுரியும் போலீஸாரை, அவர்களது போலீஸ் ஸ்டேஷனுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என, போலீஸார் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலூர் ஆகிய நான்கு போலீஸ் சப்-டிவிசன்கள் உள்ளன. அதன் கட்டுப்பாட்டில், மொத்தம், 28 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகிறது.இரு பிரிவுகளையும் சேர்த்து, குறைந்தபட்சம் ஒரு இன்ஸ்பெக்டர், இரு எஸ்.ஐ., மற்றும், 27 போலீஸார் வீதம் பணிபுரிய வேண்டும். ஸ்டேஷன் எல்லைக்கு தகுந்தாற்போல், போலீஸார் எண்ணிக்கை மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும். மேற்குறிப்பிட்ட எண்ணிக்கையில் போலீஸார் இருக்கும் சமயத்தில், அவர்களை இரவு மற்றும் பகல் பணியில் ஈடுபடுத்துவதற்கு வசதியாக இருக்கும்.இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள, 28 போலீஸ் ஸ்டேஷன்களிலும், மேற்குறிப்பிட்ட எண்ணிக்கைக்கும் குறைந்த அளவிலேயே, போலீஸார் பணிபுரிகின்றனர். அதனால், இரவு, பகல் ரோந்துப் பணி, பாதுகாப்பு பணி உள்ளிட்ட அனைத்து பணிக்கும், ஒரே போலீஸார் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இது, ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸாருக்கு பணிச்சுமை ஏற்படுத்துவதுடன், குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாத சூழலையும் உருவாக்குவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.நாமக்கல் மாவட்ட போலீஸார் சிலர் கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 28 போலீஸ் ஸ்டேஷன்களிலும், போதுமான எண்ணிக்கையில் போலீஸார் இல்லை. மிகக் குறைந்த அளவில் உள்ள போலீஸாரை வைத்தே, அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. போலீஸ் பற்றாக்குறை காரணமாக, ஸ்டேஷன் அத்தியாவசியப் பணியான செண்டரி பணிக்குகூட போலீஸார் இருப்பதில்லை.ஸ்டேஷனில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள போலீஸாரையும், எஸ்.பி., அலுவலகம் மற்றும் டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஈடுபடுத்துவதே இதற்கு முக்கிய காரணமாகும். ஒரு சப்-டிவிசன் போலீஸ் டி.எஸ்.பி.,க்கு ஒரு இளநிலை உதவியாளர் பணியிடம் மட்டும், அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.அவர், டி.எஸ்.பி.,க்கு உதவியாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில், ஒரு இளநிலை உதவியாளர் மட்டும் வைத்து எதுவும் செய்ய முடியாது. அதனால், அந்தந்த சப்-டிவிசனுக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸாரை எடுத்து, டி.எஸ்.பி., அலுவலக பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

அதுபோல், மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்திலும், இதே நிலை உள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸாரை பணிக்கு எடுத்து, மாவட்ட தனிப்பிரிவு உள்ளிட்ட ஒரு சில பணிகளில் ஈடுபடுத்துகின்றனர். சம்பள பில் உள்ளிட்ட ஒரு சில பணிகள் மட்டும், அமைச்சுப் பணியாளர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.எட்டு மணி நேர பணி என்பதால், ஸ்டேஷன் போலீஸாரும், அங்கு சென்று விடுகின்றனர். அமைச்சுப் பணியாளர்கள் ஓய்வு பெறும்போது, அந்த பணியிடத்துக்கு புதிதாக யாரும் நியமனம் செய்யப்படுவதில்லை. அதை சமாளிக்க, அந்தப் பணிகள் அனைத்தும் களப்பணி மேற்கொள்ளும் போலீஸார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.எஸ்.பி., மற்றும் டி.எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸாரை, அவர்கள் பணிபுரியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினாலே, பற்றாக்குறை பிரச்னை ஓரளவு சாமாளிக்க இயலும். போலீஸ் பற்றாக்குறை காரணமாக, குற்றச் செயல்களை கட்டுப்படுத்த இயலவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்