ப.வேலூர்: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி, பாதகாப்பு கேட்டு, பரமத்தி போலீஸில் தஞ்சம் புகுந்தனர்.ப.வேலூர், மேலத்தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 37. அவர், கரூரில் ரயில்வே புக்கிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். அவரும், கரூர் தேங்கலைச் சேர்ந்த சிந்தனைச்செல்வி, 29, என்ற பெண்ணும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அதற்கு, இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.மேலும், சிந்தனைச்செல்விக்கு, அவரது பெற்றோர், வேறொருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதையறிந்த சிந்தனைச்செல்வி, நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார். பின், நேற்று, பரமத்தி ரிஜிஸ்டர் அலுவலகத்தில் காதலன் சரவணனுடன், சிந்தனைச்செல்வி பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.அதையடுத்து, பாதுகாப்பு கேட்டு, பரமத்தி போலீஸ் ஸ்டேஷனில் புதுமணத் தம்பதியினர் தஞ்சம் புகுந்தனர். இரு வீட்டு பெற்றோரையும் நேரில் அழைத்து சமரசம் செய்த போலீஸார், புதுமணத் தம்பதியினரை, அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.